Asianet News TamilAsianet News Tamil

முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவிற்கான கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியது!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழாவிற்கான கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கண பக்தர்கள் பங்கேற்றனர்.

உலகப் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து கொடிபட்டம் யானை மேல் வைத்து ஊர்வலமாக நகர் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து இந்த கொடி பட்டம் கோயில் வளாகத்திற்கு வந்ததை தொடர்ந்து அங்கு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றன.

ஒரு போட்டோவுக்காக என்ன பாடு படுத்துறாங்க...சிக்கி தவிக்கும் பொன்னியின் செல்வன் டீம்

இன்று துவங்கியுள்ள இந்த தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. தசரா விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் காளி. முருகன், சிவன், குறவன், குறத்தி, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று காணிக்கை வசூல் செய்து சூரசம்காரம் நடைபெறும். அன்று கோவிலுக்கு வருகை தந்து காணிக்கை செலுத்துவார்கள். இந்த தசரா திருவிழாவை ஒட்டி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளான மருத்துவம், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

நீரில் மிதந்தவாறு 15 யோகசானங்களை செய்து புதிய சாதனை படைத்து யோகா ஆசிரியர்..

Video Top Stories