Asianet News TamilAsianet News Tamil

மழை வெள்ளத்தில் குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு.. வனத்துக்குள் விட்ட பெண்கள் !!

மழை வெள்ளத்தில் குடியிருப்புக்குள் புகுந்த பாம்பினை பயமின்றி பாம்பை பிடித்து வனத்துக்குள் விட்டனர் பெண்கள்.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்ற சிரமப்படும் குடியிருப்பு வாசிகள் தற்பொழுது மேலும் சில ஆபத்தை பார்த்து அஞ்சுகின்றனர். மழை வெள்ளத்தில் சூழும் குடியிருப்புகளுக்குள் தேவையற்ற கழிவுகள் வந்து செல்லும் நிலையில் பூச்சிகள் பாம்புகளும் புகுந்துவிடுகின்றன. இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் வசந்தம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அப்பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது. 

அதில் சுமார் 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்தது. தண்ணீர் பாயும் பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தது இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அங்கு பாம்பு பிடி வீரர் வராததால் அப்பகுதியில் உள்ள பெண்களை பயமின்றி அந்த பாம்பை  பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து அருகில் உள்ள வனப் பகுதியில் விட்டனர். இதனால் அந்த சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

இதையும் படிங்க..நாட்டையே அதிர வைத்த பயங்கர கொலை வழக்குகள்..!

Video Top Stories