கோவையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை..விடுமுறையை அறிவித்த கோவை மாவட்ட ஆட்சியர்
கோவையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அவிநாசி மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
கோவை மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் தேங்கி உள்ள மழை நீரையும் அம்மழை நீர் வெளியேற்றும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பிறகு கிக்கானிக் பாலம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். நாளை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து கோவை மாவட்டத்தில் நாளை ஒரு நாள் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..கனமழை காரணமாக பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம் இதோ
இதையும் படிங்க..எடப்பாடி Vs ஓபிஎஸ்! இருவரையும் சந்திக்காத பிரதமர் மோடி - வெளியான அதிர்ச்சி காரணம் !