Asianet News TamilAsianet News Tamil

HAPPY BIRTH DAY மின்சார கண்ணா… இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!!

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிறந்தநாளையொட்டி அவரை வாழ்த்தும் வாகையில் கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. 

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிறந்தநாளையொட்டி அவரை வாழ்த்தும் வாகையில் கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஆதரவாளர்கள், திமுக கட்சியினர், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மோசம்.! துணைவேந்தர் பதவி 40 கோடிக்கு விற்பனை - சர்ச்சையை கிளப்பிய பன்வாரிலால் புரோகித்

இதனிடையே கோவை மாநகரில் அவரது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இருந்த வசனம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் துறையை குறிபிட்டு வகையில் Happy Birth Day மின்சார கண்ணா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இந்தியக் கடற்படையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

மேலும் அந்த போஸ்டரில் மு.கருணாநிதியின் புகைப்படம், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் கொத்து அளித்த புகைப்படம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட கோவை மாநகர திமுக நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த போஸ்டர்கள் கோவை மாநகரில் அவினாசி சாலை மேம்பாலத்திலும், உக்கடம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது. 

Video Top Stories