தள்ளுவண்டியில் சிறுவனை சிகிச்சைக்காக அழைத்து சென்ற அவலம்.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்

புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால் தள்ளுவண்டியில் சிறுவனை சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

First Published Oct 30, 2022, 8:13 PM IST | Last Updated Oct 30, 2022, 8:13 PM IST

கடந்த சனிக்கிழமை ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் கொல்கத்தாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர். அந்த ரயில் புதுச்சேரி அருகே வந்தபோது, அந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்த ரயில் புதுச்சேரி ரயில்நிலையத்தை அடைந்ததும் ரயிலில் இருந்து இறங்கிய அவர்கள், சிறுவனை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

பிறகு புதுச்சேரி சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்தது. ஆனால் அந்த ஆம்புலன்சில் உள்ள ஸ்ட்ரெச்சர் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை நடைமேடைக்கு இழுத்து செல்ல முடியவில்லை. இதனால் சிறுவனை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் அங்கிருந்த பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து தள்ளிக் கொண்டு ரயில் நிலையம் வெளியே இருந்த ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து விசாரித்த போது, ஆம்புலன்சில் இருந்த ஸ்ட்ரெச்சர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேதம் அடைந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் புதிய ஸ்ட்ரெச்சர் வாங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவசர நேரத்தில் நோயாளிகளை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது’ என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இதையும் படிங்க..கோஷ்டி பூசலில் தென்காசி திமுக.. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி தகவல் - கவலையில் உடன்பிறப்புகள்