நெல்லை ராதாபுரம் யூனியனில் சல சலப்பு; பெண் கவுன்சிலரை மிதித்துச் சென்றாரா யூனியன் சேர்மனின் உறவினர்!!
நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியன் கவுன்சிலர் கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
வார்டுகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவில்லை என்பதால் அதிர்ச்சியில் மூன்று பெண் கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர். திமுக பெண் யூனியன் சேர்மனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். திமுக யூனியன் சேர்மன் சௌமியாவின் அண்ணன் மகன் காண்ட்ராக்டர் நிதிஷ்குமார் மீதும் புகார் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் படிக்க:தீபாவளி எதிரொலி.! கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!!
நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியன் சாதாரண கூட்டம் திமுக சேர்மன் சௌமியா ஜெகதீஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக கவுன்சிலர் பிரேமா, கொண்டு வந்த 3 தீர்மானத்தை நிராகரிப்பதாக திமுக சேர்மன் சௌமியா ஜெகதீஷ் தெரிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவுன்சிலர் பிரேமா, பரிமளம் கருணாநிதி மற்றும் அனிதா ஸ்டெல்லா ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மேலும் படிக்க:Watch : இறந்த கணவருக்கு வெண்கலத்தில் சிலை! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!
அப்போது கூட்ட அறைக்குள் வந்த திமுக சேர்மன் சௌமியாவின் அண்ணன் மகன் நிதிஷ் ராதாபுரம் கவுன்சிலர் பரிமளம் கருணாநிதியின் தொடையில் ஏறி மிதித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பரிமளம் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, வழியில் உட்கார்ந்து இருந்தால் அப்படி தான் செய்வேன் என்று சௌமியாவின் அண்ணன் மகன் நிதிஷ் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து, பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால், தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக கவுன்சிலர்கள் பிரேமா, பரிமளம் கருணாநிதி மற்றும் அனிதா ஸ்டெல்லா ஆகியோர் கண்ணீருடன் கூறினர்.