Watch Video | பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை வந்தது !!

சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு இன்று முதல் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

First Published Nov 11, 2022, 9:42 PM IST | Last Updated Nov 11, 2022, 10:10 PM IST

வந்தே பாரத் துவக்க நாள்  சேவை ரயிலுக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  பெருமளவில் பயணிகள், பயணிகள் சங்க பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள்  தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள், அலுவலர்கள் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அளித்தனர்.

சென்னையில் இருந்து காலை 5.50 மணி புறப்படும் இந்த ரயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடையும். நண்பகல் 12.30 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. காட்பாடி ரயில் நிலையத்திலும் இந்த ரயில் நின்று செல்லும். மைசூரில் இருந்து 1.05 மணிக்கு புறப்படும் ரயில் சென்னைக்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேரும். இந்த வந்தே பாரத் ரயில் 504 கி. மீட்டர் தொலைவை 6.5 மணி நேரத்தில் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.336 கிமீ தூரமுள்ள சென்னை - பெங்களூர்  வழித்தடத்தை 4 மணி நேரம் 30 நிமிடத்தில் கடக்கிறது.

இதையும் படிங்க..கனமழை காரணமாக பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம் இதோ

இதையும் படிங்க..எடப்பாடி Vs ஓபிஎஸ்! இருவரையும் சந்திக்காத பிரதமர் மோடி - வெளியான அதிர்ச்சி காரணம் !