புதுச்சேரியில் இரண்டு பெண்கள் செய்த காரியம்; வைரலாகி வரும் வீடியோ!!
புதுச்சேரியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பட்டப்பகலில் இரண்டு பெண்கள் நெய் பாட்டில்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பட்டப்பகலில் இரண்டு பெண்கள் பொருட்கள் வாங்குவதுபோல் 6 நெய் பாட்டில்களை மறைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்கள் குறித்து தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் பகுதியில் அமைந்துள்ளது லக்கி சூப்பர் மார்க்கெட். இது தனியாருக்கு சொந்தமானது. இங்கு நேற்று மதியம் மளிகைப் பொருட்கள் வாங்குவது போல் இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அப்போது, அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெய் பாட்டில்களில் 6 பாட்டில்களை எடுத்து மறைத்து திருடி சென்றுள்ளனர். இது, அங்கு இருக்கும் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க..கோவை தெற்கில் கமல்ஹாசனை தோற்கடித்து மாஸ் காட்டியவர் வானதி சீனிவாசன்.. பாஜக Vs மநீம மோதல் !
இதுகுறித்து கடை உரிமையாளர் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்கள் குறித்து தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடரந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க..பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு