comscore

Cinema

Chinmayi Facebook live video
Video Icon

ஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில்! தோலுரித்து தொங்கவிட்ட சின்மயி வீடியோ

என்னை பாலியல் தொழிலாளி என்பார்கள். ஒரு விஷயம் சொல்கிறேன். நீங்கள் என்னை பாலியல் தொழிலாளி எனக் கூறுவதால் நான் வெட்கித் தலை குணிய மாட்டேன். இந்த உலகிலேயே ஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில்.  ஆண்களின் பல்வேறு பாலியல் தேவைக்காகவே இந்தத் தொழில் இருக்கிறது. ஒருவேளை அந்த தொழிலாளிகள் எல்லாம் திருந்திவந்தால் நீங்கள் சமூகத்தில் அவர்களுக்கு இடமா கொடுக்கப்போகிறீர்கள்? எனது பிறப்புறுப்பை சொல்லியே திட்டுவார்கள். ஆரம்பத்தில் மனம் வலித்தது. அப்புறம் ஆமாம் நான் ஒரு பெண், எனக்கு பெண் பிறப்புறப்பு இருக்கிறது. இதில் நான் ஏன் அவமானப்பட வேண்டும் என மனதை தேற்றிக் கொண்டேன்.