கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி.. ஆனால் 15 நிபந்தனைகள்

கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது. 

The Central Coastal Regulatory Authority has given permission to set up the kalaingnar's pen memorial.. but with 15 conditions

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினாவில் ரூ.81 கோடி கோடியில் பேனா நினைவுச்சின்னம் அமைய உள்ளது. கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. கருணாநிதி நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்திற்கு நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Heavy Rain In Chennai: சென்னையின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

இந்த நிலையில் சென்னை மெரினாவில் கலைஞர் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் தந்த நிலையில், தற்போது மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கி உள்ளது. எனினும் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஎன்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்தவொரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் குழு அமைத்து, கண்காணிக்க வேண்டும்,

அவசரகால மீட்புப்பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும். ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது. தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், மண் அரிப்பு, மணல் திரட்சி குறித்து கண்காணிக்க வேண்டும். ஏதேனும், தவறான போலியான தகவல் இருப்பது தெரியவந்தால் அனுமதி வாபஸ் பெறப்படும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆர்என் ரவி.!வள்ளலாரின் நெறிமுறைகளை சிதைப்பதா.?தங்கம் தென்னரசு ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios