உதயநிதி ஸ்டாலின் மீதான சனாதன வழக்கு: நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம்!

அமைச்சர்கள் உதயநிதி, அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி ஆ.ராசா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.

Sanatana case against Udayanidhi Stalin: Madras High Court to deliver judgment tomorrow sgb

தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான சனாதன சர்ச்சை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் அமர்வு நாளை (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கவுள்ளது.

2023ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடந்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இந்தப் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி ஆ.ராசா ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கு இருப்பதாகக் கூறியுள்ளது.

ஒரு மணிநேரத்துக்கு ரூ.1000! தெறிக்கவிடும் பெங்களூரு ப்ரீமியம் பார்க்கிங் கட்டணம்!

Sanatana case against Udayanidhi Stalin: Madras High Court to deliver judgment tomorrow sgb

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று பாராட்டினார்.

பின்னர் அவர் பேசியதுதான் இந்தச் சர்ச்சைக்கு வித்திட்டது. "சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்" என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பிரதமர் மோடி உள்பட பலரும் பொங்க எழுந்து உதயநிதி இந்துக்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டார் என குற்றம்சாட்டினர். இதன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

ராகுல் காந்தி யாத்திரையில் 'மோடி மோடி' என்று முழக்கமிட்ட பாஜக தொண்டர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios