BJP : கள்ளக்குறிச்சி விவகாரம்.. திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - சென்னையில் முக்கிய பாஜக தலைவர்கள் கைது!
BJP Chennai : கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசி எதிர்த்து பாஜக சார்பில் இன்று தமிழகத்தின் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 52 பேர் இறந்த சம்பவம் தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பையும், சோக அலைகளையும் கடந்த சில நாட்களாகவே ஏற்படுத்தி வருகிறது என்று கூறினால் அது மிகையல்ல. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
அதே நேரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு ஏன் இவ்வளவு நிவாரணத் தொகை கொடுக்க வேண்டும்? என்கின்ற கேள்வியும் தொடர்ச்சியாக பல அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
சுயமரியாதை திருமணத்தை ஆதரிப்பவர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளுக்கு அதை செய்யுங்கள் - ரஞ்சித் ஆவேசம்
அப்போ அவர் "கள்ளச்சாராயணத்தை விற்று, கொள்ளை லாபம் சம்பாதித்தவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, அதிலிருந்து எடுத்து தான் இறந்தவனுடைய குடும்பத்திற்கு நிவாரண நிதி கொடுக்க வேண்டும். மாறாக ஏழை எளிய மக்கள் வரியாக கட்டும் பணத்தை, இப்படி சாராயத்தை குடித்துவிட்டு இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு கொடுப்பது ஏற்புடையதல்ல" என்று கூறியிருந்தார்.
மேலும் வரும் திங்கட்கிழமை அதிமுக சார்பில் தமிழகம் எங்கும், திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணங்களை கண்டித்து தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தற்போது வரை சில மாவட்டங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தமிழக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர்கள் வி.பி துரைசாமி மற்றும் MLA எம்.ஆர் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், அவர்களையும், பாஜக தொண்டர்களையும் போலீசார் கைது செய்து டி-நகரில் உள்ள ஒரு சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாடு திருடி மாட்டிக்கொண்ட வடமாநில நபர்; சமயோஜித புத்தியால் 1 அடி கூட வாங்காமல் தப்பித்த சுவாரசியம்