ISRO LVM3-M3:நெல்லை மகேந்திரகிரியில் நடந்த இஸ்ரோவின் மிகப்பெரிய LVM3-M3 ராக்கெட் எஞ்சினின் முக்கிய பரிசோதனை

திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் ஐபிஆர்சி மையத்தில் மிகப்பெரிய ராக்கெட்டான எல்விஎம்3-எம்3(LVM3-M3) ராக்கெட் எஞ்சினின் முக்கியப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

ISRO performs important engine testing on its largest rocket

திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் ஐபிஆர்சி மையத்தில் மிகப்பெரிய ராக்கெட்டான எல்விஎம்3-எம்3(LVM3-M3) ராக்கெட் எஞ்சினின் முக்கியப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதாவது, எல்விஎம்3-எம்3 ராக்கெட்டின் சிஇ-20 எஞ்சின்(ப்லைட் அக்சப்டென்ஸ் ஹாட் டெஸ்ட்) எந்த அளவு வெப்பத்தை தாங்குகிறது என்பது குறித்த பரிசோதனை நேற்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த எல்விஎம்3-எம்2 ராக்கெட் கடந்த 23ம்தேதி  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 36 செயற்கைக்கோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக 36 செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக எல்விஎம்3-எம்3 ராக்கெட் எஞ்சின் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிய ISRO.. ஒரே நேரத்தில் 6 டன் எடை கொண்ட 36 செயற்கைகொள்களை ஏவ தயாராகும் GSLV MK111..

ISRO performs important engine testing on its largest rocket

இஸ்ரோ வர்த்தகரீதியாக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. முதல்முறையாக முழுமயைாக வர்த்தகரீதியாக செயற்கைக்கோள்களை கடந்த முறை எல்விஎம்3-எம்2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. 

லண்டனில் உள்ள ஒன்வெப் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை மத்திய அரசுக்கு உட்பட்ட, இஸ்ரோவின், “நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடட் நிறுவனம்” மூலம் செலுத்தப்பட்டது. 

இஸ்ரோ இதுவரை செலுத்திய ராக்கெட்டுகளில் மிகவும் அதிக எடை கொண்டதாக எல்விஎம்3-எம்2 ராக்கெட் இருந்தது. இஸ்ரோ ஏவிய ராக்கெட்டுகளிலேயே  இந்த ராக்கெட் மிகப்பெரியது. இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளம் கொண்டது, ஏறக்குறைய 8டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

ஓன்வெப் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் “ 2023ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் எங்கள் சேவையைத் தொடங்குவோம். லடாக் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் அருணாச்சலப்பிரதேசம் வரை தொடர்பு விரிவுபடுத்துவோம்.

36 செயற்கைக்கோள்களுடன் LVM3-M2 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது: முழுவர்த்தக ரீதியாக முதல் பயணம்

நிறுவனங்களுக்கு மட்டும் சேவைஇல்லாமல், கிராமங்கள், நகரங்கள், நகராட்சிகள், பள்ளிகள், போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கும் பிராட்பேண்ட் சேவை தொடரும்” எனத் தெரிவித்துள்ளது.

ISRO performs important engine testing on its largest rocket

36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட்..! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

கடந்த 23ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட  எல்எம்வி3-எம்3 ராக்கெட் மூலம், 36 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டன. இதன் எடை 5,796 கிலோ. முதல்முறையாக இந்த அளவு அதிகமான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் முதல் இந்திய ராக்கெட் இதுவாகத்தான் இருக்கும்.

எல்விஎம்-3 எம்-2 ராக்கெட் முதல்முறையாக செயற்கைக்கோள்களை பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.அதாவது பூமியிலிருந்து 1200கி.மீ தொலைவில் செயற்கைக்கோள் நிறுத்தப்பட்டது.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios