Erode East By-Election: வீடு வீடாக 2 கிலோ கறி, ரூ.5000 வழங்குவதாக திமுக மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார்
ஈரோட்டில் திமுகவினர் வாக்காளர்களுக்கு 2 கிலோ கறியும் ரூ.5000 வரை பணமும் கொடுப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று பணம் மற்றும் பொருட்களை விநியோகம் செய்துவருவதாக பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தமிழகத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரின் திடீர் மறைவையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 22 மாதங்களாக திமுக ஆட்சியில் இருந்தும் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. அதனால், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற பணத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
திமுக அமைச்சர் திரு கே. என். நேரு அவர்களும், திமுக கூட்டணி வேட்பாளர் திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களும் வாக்குக்கு பண விநியோக முறைகள், விநியோக மையம் மற்றும் பணம் விநியோகம் செய்வதற்கான காலக்கெடு குறித்து விவாதித்த ஆடியோவை 29 ஜனவரி 2023 அன்று வெளியிட்டோம்.
இந்த ஆடியோ பற்றி கருத்து தெரிவித்த பாஜக தமிழக மூத்த தலைவர்கள், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்துவது குறித்த எங்களின் அச்சங்களை மாநில தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பித்ததுடன், ஜனநாயக உணர்வைக் கொன்ற திமுகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Abdul Nazeer: முத்தலாக், அயோத்தி தீ்ர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி அப்துல் நசீருக்கு ஆளுநர் பதவி
Rahul Gandhi: ராகுல் காந்தி விமானம் தரையிறங்க மறுப்பு? வாரணாசி விமான நிலையம் பதில்
பிப்ரவரி 11, 2023 அன்று, ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், திருப்பூர் மாவட்டம், திமுக தெற்கு ஒன்றியப் பொருளாளர் சர்புதீனின் காரில் இருந்த டோக்கன்களை தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கடந்த வார இறுதியில் திமுகவினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2 கிலோ இறைச்சியை லஞ்சமாக வழங்கினர். அங்குள்ள வாக்காளர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை வழங்க திமுக அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தைப் பாதிக்கும் வகையில் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
தமிழக பாஜக அளித்த புகாரின் மீது மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் திமுக அரசின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க குறிப்பிடத்தக்க விதத்தில் எதையும் செய்யவில்லை.
ஈரோடு கிழக்கில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறோம்.
இவ்வாறு பாஜகவின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சிக்னலில் நிற்காத கார்... தடுக்க முயன்றபோது 1.5 கி.மீ. இழுத்தச் செல்லப்பட்ட போலீஸ்