குரங்கை ஏவி கடிக்கவிட்ட கொடுமை..! 50 பேர் மாயமான மர்மம் .?ஆசிரமத்தில் நடந்தது என்ன..? விசாரணை தேவை- அன்புமணி

விக்கிரவாண்டி ஆதரவற்றோர் இல்லத்தில்  நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Anbumani insisted on the need for a special investigation into the incident at the Villupuram Ashram

ஆசிரமத்தில் 50 பேர் மாயம்

விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாகவும், 50 பேர் மாயமாகிவுள்ளது குறித்தும் சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையென பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்புஜோதி என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பெரும் அதிர்ச்சியளிக்கிறது! ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்;

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.! குரங்குகளை வைத்து கடிக்க வைக்கும் கொடூரம்..! ஆசிரமத்தில் நடந்தது என்ன.?

Anbumani insisted on the need for a special investigation into the incident at the Villupuram Ashram

குரங்குகளை ஏவி கடிக்க வைத்த கொடுமை

குரங்குகளை ஏவி கடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவை அனைத்தையும் கடந்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் மாயமாகி விட்டதாக கூறப்படுவதை பார்க்கும் போது அங்கு பெரும் குற்றங்கள் நடந்திருக்கக் கூடும்! ஆதரவற்றோர் இல்லம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக  அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  அப்படியானால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் என்ன தான் செய்து கொண்டிருந்தன? இதன் பின்னணியில் செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளனரா? என்பது கண்டறியப்பட வேண்டும்!

 

இல்லத்திலிருந்து எவ்வளவு பேர் கடத்தப்பட்டனர்? எவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டனர்? என்பன உள்ளிட்டவை கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்! என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அன்புஜோதி ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை.! மாயமான 14 பேர் நிலை என்ன.? முக்கிய நபரை அலேக்கா தூக்கிய போலீஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios