துவங்கியது இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு..! 3552 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் போட்டி
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் தீயணைப்பாளர் பணிகளுக்கான 3553 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.
இரண்டாம் நிலை காவலர் தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநிலம் முழுவதும் 3552 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் இரண்டாம் நிலை காவலர் சிறைகாவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது கோவையில் இந்த தேர்வானதே கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இந்துஸ்தான் கல்லூரி என் ஜி பி கலை அறிவியல் கல்லூரி பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஆகிய ஆறு மையங்களில் நடைபெறுகிறது இதில் நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12,309 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுதுபவர்கள் காலை 8. 30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வரவேண்டும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தற்போது தேர்வானது நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..! தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி
ஆர்வமுடன் பங்கேற்ற தேர்வர்கள்
இதே போல தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் தீயணைப்பாளர் பணிகளுக்கான தேர்வு தேனி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வருகிறது. தேனி கம்மவர் சங்கம் மெட்ரிக் பள்ளி, கொடுவிலார்பட்டி என்ஜினீயரிங் கல்லூரி, தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி,மேரி மாதா மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. மாவட்டத்தில் 1320 பெண்கள் உள்பட மொத்தம் 10760 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்து அழைப்பாணை பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இன்று காலை ஏழு முப்பது மணி முதலாகவே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
தேர்வர்களுக்கு போக்குவரத்து வசதி
காலை 10 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரை தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு நடைபெறும். தமிழ் மொழி தகுதித் தேர்வில் 80 கேள்விகளும், முதன்மை எழுத்துத் தேர்வில் 70 வினாக்கள் என மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வர்கள் சரியான நேரத்தில் தேர்வு எழுத வரும் வகையில் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்ததாக காவல்துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்
காசி தமிழ்ச் சங்கமம்..! தொழில் முனைவோர்களுடன் கோவையில் இருந்து புறப்பட்ட 5வது ரயில்