Novak Djokovic: தன்னுடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் - தலை குணிந்து பாராட்டும் நோவக் ஜோகோவிச்!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டென்னிஸ் விளையாடியதைக் கண்டு வியந்த நோவக் ஜோகோவிச் தலை வணங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Both Novak Djokovic and Steve Smith Playing Tennis and Cricket ahead of Australian Open 2024, Video goes viral

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரும் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் பார்க்கில் தொடங்கி வரும் 28ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில் 10 முறை சாம்பியனான செர்பியன் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் இடம் பெற்று விளையாட இருக்கிறார். தற்போது இந்த தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில், இந்த தொடரை பிரபலப்படுத்தும் விதமாக நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இணைந்து டென்னிஸ் விளையாடினர்.

Rohit Sharma: டி20 கிரிக்கெட்டில் 100 வெற்றி – முதல் வீரராக ரோகித் சர்மா வரலாற்று சாதனை!

 

இதில், ஜோகோவிச் பந்தை சர்வீஸ் செய்ய, பேட்டிங்கில் தடுப்பது போன்று ஸ்மித் கச்சிதமாக பந்தை திருப்பி அனுப்பினார். இதைக் கண்ட ஜோகோவிச் டென்னிஸ் பேட்டை கீழே போட்டுவிட்டு தனது இரு கைகளையும் தூக்கி தலை குணைந்து ஸ்மித்திற்கு மரியாதை செய்தார். அதன் பிறகு டென்னிஸ் மைதானத்திலேயே ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார்.

14 மாதங்களுக்கு பிறகு ரிட்டர்ன் – ஓடி வந்து ரன் அவுட்டான ரோகித் சர்மா, வேடிக்கை பார்த்த கில் – என்ன நடந்தது?

ஸ்மித் பந்து வீச, ஜோகோவிச் பேட்டிங் செய்தார். முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய ஜோகோவிச்சைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதன் பிறகு ரசிகர் ஒருவர் பந்து வீசினார். அவர் வீசிய 2 பந்துகளையும் பார்வையாளர் மாடத்திற்கு விரட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rohit Sharma Run Out: ஏமாந்த ரோகித் சர்மா – கச்சிதமாக முடித்துக் கொடுத்த ஆள் இன் ஆள் அழகுராஜா ஷிவம் துபே!

கடைசில பயம் காட்டிய நபி, அசால்ட்டா தூக்கிய முகேஷ் குமார் – ஆப்கானிஸ்தான் 158 ரன்கள் குவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios