ஒருமுறைபயன்படுத்திய ஆணுறையை மீண்டும் உபயோகிக்கலாமா?
உடலுறவின் போது பெரும்பாலான ஆண்கள் ஆணுறைகளை அணிகின்றனர். இதனால் தேவையற்று ஏற்படும் கர்ப்பத்தை தவிர்க்கலாம். ஆனால் சில நேரங்களில் ஆண்கள் ஆணுறைகளை அணிவதில் தவறு செய்துவிடுகின்றனர். இதனால் அவர்கள் எதிர்பார்க்காத பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுவிடுகின்றன.
பால்வினை நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் மற்றும் கர்ப்பம் ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் தான் பெரும்பாலும் ஆணுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆணுறைகள் ஆணிகளுக்கு உரியது தான். அதை பயன்படுத்தும் முறைகளை ஒவ்வொரு ஆணும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஆனால் பலருக்கும் ஆணுறை பயன்பாடு குறித்த புரிதல் இருப்பதாக தெரியவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆணுறைகளைப் பயன்படுத்தும் போது குறிப்பிட்ட சில விஷயங்களை கவனிப்பது மிகவும் முக்கியம். நீங்கள் அதில் தவறு ஏதாவது செய்துவிட்டால் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடிய அபாயம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஆணுறை அணியும்போது ஆண்கள் என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
பற்களால் கடித்து திறக்கக்கூடாது
பலரும் மிட்டாய் கவரை பல்லால் கடித்து கிழிப்பது போன்று, ஆணுறை பாக்கெட்டை பற்களால் கடித்து குதறி எடுப்பார்கள். இதனால் ஆணுறை பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளது. உடலுறவின் போது கிளர்ச்சியால் விந்து வெளியேறும் போது, அது உங்களுடைய துணையில் உடலில் கசிந்துவிடக் கூடும். தவிர, பற்களால் கடித்து எடுக்கும் போது ஆணுறையில் நகங்கள் பட்டும் கிழியலாம். இதுமட்டுமின்றி பலமுறை ஆணுறை பாக்கெட்டை பற்களால் திறக்கும் போது வெடித்துவிடுவதற்கும் வாய்ப்புள்ளது.
உங்கள் கணவரிடம் ‘அந்த’ படம் பார்க்கும் பிரச்னையுள்ளதா..?? அப்போ இதப்படிங்க..!!
சரிபார்ப்பு முக்கியம்
பெரும்பான்மையான ஆண்கள் உடலுறவு கொள்ள வேண்டும் என்கிற ஆசை மிகுதியால் ஆணுறை பாக்கெட்டுகளை சரிபார்க்காமலே வாங்கி பயன்படுத்திவிடுவார்கள். அதனால் எதிர்பாராதது ஏதாவது நடந்தால் சிக்கிக்கொண்டு தவிப்பார்கள். அதனால் வாங்கியவுடன், பாதுகாப்பான முறையில் பாக்கெட்டை கிழித்தவுடன் அதில் வேறு ஏதாவது பாதிப்புள்ளதா என்று பார்க்க வேண்டும். மேலும் ஆணுறையில் வேறு ஏதாவது விசித்திரமான பிரச்னைகள் உள்ளதா என்றும் ஆராய வேண்டும். ஏனென்றால் கிழிந்த ஆணுறையிலிருந்து விந்தணு எளிதாக வெளியேற அதிக வாய்ப்புள்ளது.
அதிக பாலியல் இச்சை கொண்ட பெண்களை எப்படி சமாளிக்கலாம்..? ஆண்களே தவறாமல் படிங்க..!!
உடலுறவுக்கு முன் ஆணுறை வேண்டாம்
கலவிக்கு முன்னதாக, பாலியல் முன் விளையாட்டுக்கு மட்டும் பல ஆண்கள் ஆணுறைகள் அணிகின்றனர். அப்படி செய்வதால் பால்வினை நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதனால் , உடலுறவின் போது முன்கூட்டியே ஆணுறை அணிவதை தவிர்ப்பது நல்லது. தேவைப்படும் போது மட்டும் ஆணுறையை பயன்படுத்துவது முக்கியம் பெறும்.
Illegal Affair : ஏன் கள்ளக் காதல் ஏற்படுகிறது? ஆய்வு சொல்லும் 5 உண்மைகள்..!!
மீண்டும் பயன்படுத்த வேண்டாம்
சிலநேரம் ஆணுறை அணிந்திருக்கும் போது விந்து வெளியேறாது. அப்போது ஆண்கள் சிலர் மீண்டும் அந்த ஆணுறையை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இது பெரும் தவறாகும். இதுபோன்ற தவறை ஆணுறை அணியும் எந்த ஆணும் செய்யக்கூடாது. இப்படி செய்வதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வழிவகுக்கும். மேலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறை பலவீனமாகிவிடும். அதை மீண்டும் பயன்படுத்தினால் அபாயம் ஏற்படும். எந்த நேரத்திலும் ஆணுறை வெடித்து, தேவையற்ற கர்ப்பம் ஏற்படலாம் அல்லது சிக்கல் ஏற்படலாம்.