அட! சிகரெட் பிடிப்பதை நிறுத்த ஸ்மார்ட்வாட்ச் உதவுமா? ஆய்வில் வெளியான குட் நியூஸ்; முழு விவரம்!
சிகரெட் பிடிப்பதை நிறுத்த ஸ்மார்ட்வாட்ச் உதவும் என்பதை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.
smartwatch can help quit smoking
உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர். புகைப்பழக்கம் நமது உடலை பாதிப்பது மட்டுமின்றி நம்மை சுற்றி இருப்பவர்களையும் கடுமையாக பாதிக்கிறது. தினம்தோறும் புகைப்பழக்கம் ஏராளமான உயிர்களை பறித்து வரும் நிலையில், சிலர் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் நிறுத்த முடியவில்லை.
இந்நிலையில், புகைப்பழக்கத்தை நிறுத்த வேறு ஏதும் தேவையில்லை ஸ்மார்ட்வாட்ச் போதும் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர. அது எப்படி ஒரு ஸ்மார்ட்வாட்ச் புகைப்பழக்கத்தை நிறுத்தும்? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
smartwatch
அதாவது பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸ்மார்ட்வாட்ச்களில் ஒருவர் புகைபிடிக்கும்போது ஏற்படும் கை அசைவுகளைக் கண்டறியும் மோஷன் சென்சார் மென்பொருளை இன்ஸ்டால் செய்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
ஆய்வின்படி, தினசரி புகைப்பிடிப்பவர்கள், புகைபிடிப்பதில் இருந்து வெளியேற முயல்பவர்கள் மற்றும் வலது கையைப் பயன்படுத்தி புகைபிடிப்பவர்கள் என 18 நபர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட்வாட்ச் அணிந்து கொண்டனர். பின்னர் ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள மோஷன் சென்சார்கள் மூலம் அவர்கள் புகைபிடிக்கும் சைகைகளைக் கண்டறியும் திறன் கொண்ட அல்காரிதத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினார்கள்.
Smoking Habits
இதனைத் தொடர்ந்து ஆய்வில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொரு முறை சிகரெட் பிடிக்கும்போதும் அவர்களின் கை அசைவுகளை வைத்து ஸ்மார்ட்வாட்ச் மென்பொருள் அதை கண்டறிந்து திரையில் வார்னிங் செய்கிறது. மேலும் ஒரு வார்னிங் நோட்டிபிகேஷனையும் அனுப்புகிறது. தெளிவாக சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு முறையும் சிகரெட் பிடிப்பதற்காக கையைத் தூக்கும்போது மென்பொருள் மூலம் ஸ்மார்ட்வாட்ச் அதை கண்டறிந்து வைப்ரேஷன் போன்ற ஒரு அதிர்வை கொடுக்கும்.
இதன்மூலம் சிகரெட் உள்பட புகைப்பிடிப்பவர்கள் அதை உணர்ந்து அந்த நேரத்தில் சிகரெட் பிடிப்பதை தள்ளி வைத்து விடுவார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் ஸ்மார்ட்வாட்ச் எச்சரிக்கை செய்யும்போது புகைப்பழக்கத்தை விடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
smoking cigarette
புகைபிடிக்கும்போது ஏற்படும் கை அசைவுகளை வைத்து வார்னிங் சவுண்ட் கொடுக்கும் ஸ்மார்ட்வாட்ச்கள் புகைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு செய்திகள், எச்சரிகை செய்திகளை திரையில் காண்பிக்கும். ''இன்று நீங்கள் ஏற்கனவே சிகரெட்டைத் தவிர்த்துவிட்டீர்கள். இதேபோல் தொடருங்கள். நீங்கள் ஏன் புகைபிடிப்பதை விட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்'' என்ற புகைப்பழக்கத்தை விடுவதற்கான தன்னம்பிக்கை வாசகங்களையும் ஸ்மார்ட் வாட்ச் திரையில் தோன்றும்.
ஆனாலும் இந்த ஆய்வில் முடிவில் சில தவறான முடிவுகளும் வந்தன. அதாவது கையில் சிகெரெட் இல்லாமல் வெறும் புகைபிடிப்பது போல் சைகை வைத்தாலும் ஸ்மார்ட்வாட்ச் எச்சரிக்கை விடுக்கிறது என்று ஆய்வில் பங்கேற்ற சிலர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பான தவறுகளை நிவர்த்தி செய்து இந்த ஆய்வுக்கு செயல்வடிவம் கொடுக்கும் பணிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஒரு ஸ்மார்ட்வாட்ச் போதும், மருத்துவரே தேவையில்லை; பட்ஜெட் விலையில் இத்தனை நன்மைகளா?