சங்கி என்பது கெட்டவார்த்தை கிடையாது... மகளின் சர்ச்சை பேச்சு குறித்து ரஜினிகாந்த் விளக்கம்
வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றபோது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், சங்கி சர்ச்சை பற்றி தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினி. லால் சலாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட லால் சலாம் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் தந்தையை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து பேசியது வைரலானது. அதன்படி தன் தந்தையை சங்கி என விமர்சித்ததை பார்த்து தான் கோபம் அடைந்ததாக கூறினார். அவர் சங்கி இல்லை என்று பேசிய அவர், ஒருவேளை அவர் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்... பொண்ணா இருந்தா இங்க படம் தர மாட்டாங்க... கோலிவுட்டில் உள்ள அரசியலை தோலுரித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யாவின் பேச்சு மிகவும் வைரல் ஆன நிலையில், இன்று வேட்டையன் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை விமான நிலையம் வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம், சங்கி சர்ச்சை குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஜினி, சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை. ஐஸ்வர்யாவும் அப்படி பொருள்படும் படி பேசவில்லை.
நான் ஆன்மீகவாதி என்பதாலும், அனைத்து மதங்களையும் நேசிப்பவர் என்கிற அர்த்தத்திலும் தான் அவர் பேசியுள்ளார். அவர் பேசியது சரி தான். அவர் படத்தின் புரமோஷனுக்காக இப்படி பேசவில்லை. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. மத நல்லிணக்கத்தை பற்றி இப்படத்தில் பேசியுள்ளனர் என கூறிவிட்டு தன்னுடைய டிரேட் மார்க் ஸ்மைல் உடன் கிளம்பி சென்றார் ரஜினி.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா என்னுடைய 2-வது தாய்... தன்னுடைய சிங்கப்பெண்கள் பற்றி பேசி கண்கலங்கிய ரஜினிகாந்த்