காக்கா - கழுகு கதை! பட்டம் யாருக்கு..? நெத்தி பொட்டில் அடித்தது போல் நச்னு கருத்து சொன்ன லெஜெண்ட் சரவணன்!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன், காக்கா - கழுகு கதை சர்ச்சை குறித்து நச்சுனு பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும், தி லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மாறிய லெஜெண்ட் சரவணன் இன்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்க தொகையினை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு விஷயம் குறித்து... பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக இவர் ஒரு நடிகர் என்பதால், கடந்த சில மாதமாக இரு தரப்பினருக்கு இடையே... காரசாரமாக விவாதிக்கப்பட்டு வரும், காக்கா - கழுகு சர்ச்சை குறித்து இவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மிகவும் எதார்த்தமாக, நிதானமான உண்மையை நெத்தி பொட்டில் அடித்தது போல் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "எந்த ஒரு நாட்டில் வியாபாரம் செழிப்பாக இருக்கிறதோ, அந்த நாட்டில் பொருளாதாரம் செழுமையாக இருக்கும். ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் வியாபார சுழற்சி பங்காற்றி வருகிறது. நம் நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக இருந்தால் தான் பொருளாதாரமும் வலிமையாக இருக்கும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு வெற்றிகரமான வியாபாரத்திற்கு, உண்மையான மற்றும் கடினமான உழைப்பு தான் மிகவும் முக்கியம் என்பதை எப்போதும் மறவாதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருவதை பார்க்கிறோம். ஆனால் அதில் காக்கா - கழுகு கதைகள், ஒரு பட்டம் யாருக்கு என்கிற பிரச்சனைகள் உள்ளது?இதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டுமே நாம் உயர முடியும். நம்ம நாடும் உயரும். மக்களும் உயர்வார்கள். எனவே உழைப்போம், உயர்வோம், நாம் நாட்டையும் உயர்த்துவோம், அன்பால் இணைந்து செயல்படுவோம்" என்று பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு ஆதரவு கூடி வருகிறது.