Beauty Tips : கோடையில் வறண்ட சருமம் மென்மையாக 'இந்த' ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!
உங்கள் சருமத்தின் வறட்சி நீக்கு, வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஃபேஸ் பேக்குகளை முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும்.
சிலர் எண்ணெய் பசை சருமத்தால் அவதிப்படாலும், சிலருக்கு வறண்ட சருமத்தாலும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் கோடை காலத்தில் இந்த பிரச்சனை நீடிக்கும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் பொதுவாக அரிப்பு, சொறி, எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே, உங்களுக்கு சருமம் வறண்டு இருந்தால், வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஃபேஸ் பேக்குகளை முயற்சி செய்து பாருங்கள். நிவாரணம் பெறுங்கள்.
தர்பூசணி ஃபேஸ் பேக்: இதில் நல்ல அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் இருப்பதால், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. இதில், நல்ல அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் 'சி'யும் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது.
தர்பூசணி ஃபேஸ் பேக் செய்ய, 1 ஸ்பூன் தர்பூசணி சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் தடவி, மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
முல்தானி மிட்டி : தேன்: இந்த ஃபேஸ் பேக் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது சருமத்திற்கு அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வாரி வழங்குகிறது. குறிப்பாக, இது சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும்.
முல்தானி மிட்டி மற்றும் தேன் கொண்டு ஃபேஸ் பேக் செய்ய முதலில், ஒரு கிண்த்தில் 1 ஸ்பூன் முல்தானி மிட்டி மற்றும் அரை தேன் எடுத்து, நன்றாக கலந்து கொண்டு, அதை முகத்தில் தடவி, காய்ந்து போகும் வரை காத்திருங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
இதையும் படிங்க: Beauty Tips : 20 நிமிடத்தில் முகம் பொலிவாக இருக்க 'இந்த' கோடைகால பழங்களில் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!
வெள்ளரி ஃபேஸ் பேக்: வெள்ளரிக்காய் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில், இதில் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமூட்டும் கூறுகள் நிறைந்துள்ளது. இது தோல் எரிச்சல் மற்றும் அரிப்பிலிருந்து நிவாரணம் தரும்.
இதையும் படிங்க: Beauty Tips : ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் மறைய புதினா இலை ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!
வெள்ளரி ஃபேஸ் பேக் செய்ய, அரை வெள்ளரி மற்றும் 1 ஸ்பூன் சர்க்கரை தேவை. வெள்ளரிக்காயை தோல் நீக்கி, நன்கு மசித்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து, முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D