உள்ளாடை மட்டும் அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி மிரள வைத்த மாளவிகா மோகனன்
தங்கலான் படத்தில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனனின் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தில் சின்ன ரோலில் நடித்து அசத்திய மாளவிகாவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் மாளவிகா மோகனன்.
மாஸ்டர் படத்துக்கு பின்னர் தனுஷின் மாறன் படத்தில் நடித்த மாளவிகா, பின்னர் இந்தி மற்றும் மலையாள படங்களில் நாயகியாக நடித்தார். தற்போது நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. பா.இரஞ்சித் இயக்கிய இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதையும் படியுங்கள்... சர்ப்ரைஸ்... விஜய் - வெங்கட் பிரபு இணையும் ‘தளபதி 68’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
தங்கலான் படத்திற்காக நடிகை மாளவிகா மோகனன் உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிக்க பிரத்யேக பயிற்சியும் எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நடிகை மாளவிகா மோகனன், சிலம்பம் சுற்ற பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது. இது ஒருபுறம் இருக்க கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.
அந்த வகையில், தற்போது உள்ளாடை மட்டும் அணிந்தபடி உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து நடிகை மாளவிகா மோகனன் நடத்தியுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிகினி உடையிலா போட்டோஷூட் நடத்தினீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மாளவிகா மோகனனின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... அட்ராசக்க... உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது