பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போட்டு.. மஜாவாக பர்த்டே கொண்டாடிய வாலமீனு மாளவிகா- வைரலாகும் டூ பீஸ் கிளிக்ஸ்
தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மாளவிகா, பிறந்தநாளன்று பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.
malavika
சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடித்த உன்னைத்தேடி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா. அப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 19. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சினிமாவுக்குள் நுழைந்த மாளவிகாவுக்கு அடுத்தடுத்து அஜித், கார்த்திக், சூர்யா, விஜய், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரை ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது சேரன் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு படம் தான்.
malavika
வெற்றி கொடி கட்டு படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகா, அப்படத்தில் ஆடும் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது. இதையடுத்து ஜீவன் உடன் திருட்டு பயலே படத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார் மாளவிகா. பின்னர் மிஷ்கின் இயக்கிய முதல் படமான சித்திரம் பேசுதடி படத்தில் வாலமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்கிற பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி பேமஸ் ஆனார் மாளவிகா.
இதையும் படியுங்கள்... தியேட்டர்களை ஆக்கிரமித்த மாவீரன்... வேறுவழியின்றி ஓடிடிக்கு சென்ற மாமன்னன் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
malavika
இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன மாளவிகா, சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ள மாளவிகா, தமிழில் ஜீவா நடிப்பில் தயாராகி வரும் கோல்மால் என்கிற திரைப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
malavika
இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அடிக்கடி தான் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். அந்த வகையில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கோவாவுக்கு சென்றிருந்த நடிகை மாளவிகா, அங்குள்ள நட்சத்திர விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்து குளித்தபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுதான் உங்க பிறந்தநாள் டிரெஸ்ஸா என கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் டாம் குரூஸிடம் வேலை பார்க்கும் பிரபல தமிழ் நடிகையின் மகள் - இவ்ளோநாள் இதுதெரியாம போச்சே