மாலத்தீவில் கவர்ச்சி புயலாக மையம் கொண்டுள்ள ஜான்வி கபூர்... வைரலாகும் ஹாட் பிகினி கிளிக்ஸ்
பீச் ஓரம் அமைந்துள்ள ரெசார்ட்டில் இருந்து கடல் அழகை ரசித்தபடி பிகினி உடையில் ஜான்வி கபூர் போஸ் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை தொடங்கி தற்போது ரிலீசுக்காக காத்திருக்கும் துணிவு வரை வரிசையாக மூன்று படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் தான் ஜான்வி. இவரும் பாலிவுட்டில் பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் அடுத்தடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், விரைவில் தென்னிந்திய திரையுலகிலும் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவரை தெலுங்கு படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
ஆனால் நடிகை ஜான்வி கபூருக்கு நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும், அவர் நடித்த நானும் ரவுடி தான் படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜான்வி கபூர் கூறி இருந்தார்.
இவ்வாறு தென்னிந்திய திரையுலகில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ஜான்வி கபூர், சோசியல் மீடியாவிலும் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதையும் படியுங்கள்... நடிகையின் காலை பிடித்து சூர்யா பட இயக்குனர் செய்த கன்றாவி வேலை... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள ஜான்வி கபூர், அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
பொதுவாகவே கவர்ச்சியில் புகுந்து விளையாடும் ஜான்வி, மாலத்தீவுக்கு சென்றதும் சும்மாவா இருப்பார். அங்கு பிகினி உடை அணிந்தபடி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பீச் ஓரம் அமைந்துள்ள ரெசார்ட்டில் இருந்து கடல் அழகை ரசித்தபடி பிகினி உடையில் ஜான்வி கபூர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... Fanta பாட்டில் ஸ்ட்ரக்சர், எலும்புக்கூடு மாதிரி இருக்கனு கிண்டலடித்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த திவ்யபாரதி