பட வாய்ப்புக்காக எல்லை தாண்டி கவர்ச்சி காட்ட துணிந்துள்ள ஸ்ரீரெட்டி, இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற ரீதியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தார். தன்னை பல நடிகர்கள் படுக்கைக்கு அழைத்தனர் என ஸ்ரீரெட்டி கூறிய பட்டியலில், இயக்குநர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என நீளமான பட்டியலை வெளியிட்டு அதிரடி கிளப்பினார். பட வாய்ப்பிற்காக இப்படி ஸ்ரீரெட்டி தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் என அவரது குற்றச்சாட்டுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி, தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சியா?... ரசிகர்களை கிறங்கடிக்கும் கிரண்...!
சமீபத்தில் கூட தான் பாலியல் புகார் கூறிய ராகவா லாரன்ஸ் உடன் படம் நடிக்க உள்ளதாக முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார். எப்போதும் தன்னை சுற்றி சர்ச்சை மட்டுமே இருக்க வேண்டும் என விரும்பும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான நாகார்ஜுனா, சிரஞ்சீவி குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பை கிளப்பியது.இதனிடையே பட வாய்ப்புக்காக எல்லை தாண்டி கவர்ச்சி காட்ட துணிந்துள்ள ஸ்ரீரெட்டி, இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற ரீதியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இது "மாமாங்கம்" கவர்ச்சி... ஓவர் கிளாமர் போஸில் இனியா... சோசியல் மீடியாவில் செம வைரலாகும் புகைப்படங்கள்...!
மேலாடை இல்லாமல் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்திருக்கும் ஸ்ரீரெட்டி, தனது உடலை கைகளால் மறைத்த படி படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த ஹாட் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரீரெட்டி, குட் மார்னிங் என்று பதிவிட்டுள்ளார். படு கிளாமராக ஸ்ரீரெட்டி கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 11, 2019, 1:02 PM IST