இது "மாமாங்கம்" கவர்ச்சி... ஓவர் கிளாமர் போஸில் இனியா... சோசியல் மீடியாவில் செம வைரலாகும் புகைப்படங்கள்...!
சமீபத்தில் 'மாமாங்கம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ள இனியா. அந்த படத்தில் எடுக்கப்பட்டுள்ள கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, 'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் 'அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒரு நாள்', 'நான் சிகப்பு மனிதன்', 'மெளனகுரு', 'புலிவால்' போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார். திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார்.
மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டாலும், தமிழில் உரிய இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார் இனியா. தனது இருப்பை ரசிகர்களுக்கு காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இனியா, ஹாலிவுட் ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் 'மாமாங்கம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ள இனியா. அந்த படத்தில் எடுக்கப்பட்டுள்ள கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ‘மாமாங்கம்’ படத்தில் கதாநாயகனாக ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பத்மகுமார் இயக்கியிருக்கிறார். படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிடவுள்ளனர்.