Kumaran Thangarajan

குமரன் தங்கராஜன்

Current Status Live
Date Of Birth 10/03/1989
Age 37
Profession முகமது அன்சார்
Famous For பாண்டியன் ஸ்டோர்ஸ்
Birthplace சென்னை
Hobbies சினிமா பார்ப்பது, புத்தகம் வாசிப்பது

Biography

Back Ground
குமரன் தங்கராஜன் 1989 மார்ச்சு 10 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்த அவர், சிறு வயது முதலே நடனம் மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்துள்ளார். முதலில் விஜய் டிவியின் ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சியில் பின்னணி நடனக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.

Profession
சின்னத்திரையில், 2017 இல் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ தொடரில் நடித்த குமரன், தொடர்ந்து ‘ஈரமான ரோஜாவே’ தொடரிலும் மாறன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் 2018-ல் தொடங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிகை சித்ராவுக்கு ஜோடியாக நடித்தது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முல்லை–கதிர் ஜோடியின் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited)