Chandini Tamilarasan

சாந்தினி தமிழரசன்

Current Status Live
Date Of Birth 12|08|1992
Age 34
Profession நடிகை
Famous For சித்து +2
Birthplace சென்னை
Hobbies புத்தகம் வாசிப்பது, பாடல் கேட்பது

Biography

Back Ground
சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, அடுத்தடுத்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த சாந்தினிக்கு, பிக் பாஸ் வீடு முற்றிலும் புதிய களமாக இருக்கப்போகிறது. இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இயக்கிய ‘சித்து +2’ திரைப்படம் தான் சாந்தினி தமிழரசனின் சினிமா என்ட்ரி. சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Profession
‘நான் ராஜாவாகப் போகிறேன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு திரையுலகிலும் தனது நடிப்பை பதிவு செய்தார். இப்படியாக பல வருடங்களாக சினிமா உலகில் பயணித்து வந்த சாந்தினி, இப்போது தனது கேரியரில் எதிர்பாராத ஒரு ரூட்டை தேர்வு செய்திருக்கிறார்.

© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited)