வங்கதேசத்தில் கொட்டும் மழையில் முத்தமிட்டுக் கொண்டிருந்த காதலர்களை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிறகு அவருக்கு தர்ம அடியும் கொடுக்கப்பட்டது. வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள பல்கலைகழகம் சர்ச்சைகளுக்கு பெயர் போனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சில மாதங்களாக போராட்டங்களும், வன்முறை சம்பங்களும் அதிகளவில் நடைபெற்றுள்ளன. கைகளை கோர்த்து நின்ற மாணவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
வங்கதேசத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றில் ஜிபான் அஹமது புகைப்பட பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம் தாக்கா பல்லைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது திடீரென மழை வெளுத்து வாங்கியது. மழையின கோர தாண்டவத்தின் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஒரு காதல் ஜோடி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் முத்தமிட்டுக் கொண்டனர். இந்த காட்சியை தற்செயலாக படம் பிடித்த ஜிப்பான் அஹமத் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த புகைப்படத்தை பதிவேற்றியதற்காக அவர் பணிபுரிந்து வந்த நிறுவனம் அவரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது.
நீக்கத்திற்கான காரணம் குறித்து கேட்ட போது பதில் கூறவில்லை என ஜிப்பான் அஹமத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இஸ்லாமிய நாடாட வங்கதேசத்தில் பெண்கள் வெளியே வருவதற்கு கூட கட்டுப்பாடுகள் உண்டு, ஆனால் புகைப்படத்தினை வெளியிட அனுமதித்தது அந்நாட்டு இளைஞர்களிடன் வரவேற்பினை பெற்றுள்ளது.