அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுகிறாரா சீன அதிபர் ஜி ஜின்பிங் மகள் ஜி மிங்ஸே!!

Published : May 30, 2025, 05:02 PM IST
Xi Jinping daughter Xi Mingze

சுருக்கம்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மகள் ஜி மிங்ஸே, அமெரிக்காவில் பலத்த பாதுகாப்புடன் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள லாரா லூமர், ஜி மிங்ஸேவை நாடு கடத்த வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார். 

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மகள் ஜி மிங்ஸே. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மாணவர் விசா கட்டுப்பாடுகள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பலத்த பாதுகாப்புக்கு இடையே மசாச்சூசெட்ஸ் பகுதியில் ஜி மிங்ஸே வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபரின் மகளுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய லாரா லூமர்

MAHA ஆர்வலரான லாரா லூமர், "கம்யூனிஸ்டுகள் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. நான் ஜி மிங்ஸேவை வீடியோவில் சந்தித்து அவருடைய தந்தையைப் பற்றி விசாரிக்கப் போகிறேன்'' என்று பதிவிட்டு இருந்தார். மேலும், ஜி மிங்ஸேவை அமெரிக்காவை விட்டு நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக குரல் எழுப்பி இருக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மகள் ஜி மிங்ஸேவை PLA காவலர்கள் பாதுகாத்து வருவதாகவும் லாரா லூமர் குறிப்பிட்டுள்ளார். மசாச்சூசெட்ஸ் பகுதியில் தங்கியிருந்து ஹார்வேர்டு பல்கலையில் படித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால், அவரது இருப்பிடம் குறித்து வாஷிங்டன் அல்லது பெய்ஜிங் இரண்டுமே உறுதிபடுத்தவில்லை.

அமெரிக்காவின் புதிய விசா நெறிமுறைகள் சீனாவுக்கு எதிரானதா?

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் போன்ற முக்கியமான துறைகளைச் சேர்ந்த சீன மாணவர்களை குறிவைக்கும் வகையில் அமெரிக்காவின் புதிய விசா கொள்கை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு அச்சமாக கருதப்படும் சீன மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார். சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் விண்ணப்பதாரர்களுக்கு கடுமையான பின்னணி சோதனைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் விதிக்கப்படுகின்றன.

யார் இந்த ஜி மிங்ஸே?

ஜி மிங்ஸே மிகவும் ரகசியமாக வளர்க்கப்பட்டு வருகிறார். அவரது வாழ்க்கையின் பெரும்பாலான விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஜெஜியாங் பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்சோ வெளிநாட்டு மொழிப் பள்ளியில் படிப்பை முடித்தார். பின்னர், 2010 முதல் 2014 வரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு போலிப் பெயரில் உளவியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். பட்டப்படிப்புக்குப் பிறகு அவர் சீனாவுக்கு திரும்பி இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் 2019-ல் ஹார்வர்டில் பட்டப்படிப்பை மீண்டும் தொடங்கியிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. சீன அதிகாரிகள் அவரைப் பற்றிய தகவல்களை தொடர்ந்து தணிக்கை செய்துள்ளனர். ஜி மிங்ஸே தற்போது அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் பகுதியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

அமெரிக்காவின் விசா கொள்கை மாற்றத்தை சீனா உடனடியாக கண்டித்தது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் இந்த நடவடிக்கையை அரசியல் ரீதியிலானது மற்றும் வாஷிங்டன் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் சித்தாந்தத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது. விசாக்களை ரத்து செய்வதற்கான அமெரிக்காவின் முடிவு முற்றிலும் ஆதாரமற்றது. இது சீன மாணவர்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்கு தீங்கு விளைவிப்பதுடன் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை சிதைக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.

சீனா மாணவர்களின் விசாக்களை நிர்வாகம் "தீவிரமாக" ரத்து செய்யும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்த சில மணி நேரங்களில் லூமரின் பதிவு வந்தது. 2023-24-ஆம் கல்வியாண்டில், அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் 270,000 க்கும் மேற்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள். இது அமெரிக்காவில் உள்ள அனைத்து வெளிநாட்டு மாணவர்களில் கால் பங்காகும் என்று தெரிய வந்துள்ளது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இனி WFH செட் ஆகாது! 100 பேர் செய்யுற வேலையை ஈசியா முடிக்கும் AI.. கூகுள் விஞ்ஞானி எச்சரிக்கை
ஏசப்பா அந்த புதின் நாச…..போயிடணும்..! கிறிஸ்துமஸ் தினத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்த ஜெலன்ஸ்கி