
அமெரிக்க விண்வெளி படை (United States Space Force) வெள்ளிக்கிழமை தங்கள் X-37B என்ற விண்வெளி விமானத்தின் முதல் படத்தை வெளியிட்டு இருக்கிறது. அந்த விமானம் விண்வெளி சுற்றுப்பாதையில் இருப்பதைப் படம் காட்டுகிறது. அந்தப் படத்தை விமானத்தில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் எடுத்திருக்கிறார்கள். இப்போது இந்த விமானம் ஆப்பிரிக்க கண்டத்துக்கு மேல் சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X-37B விண்வெளி விமானம் ஒரு வருடத்துக்கும் மேலாக தனது விண்வெளி சுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது. இது டிசம்பர் 28, 2023 முதல் தனது ஏழாவது மிஷனுக்காக ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் Falcon ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விமானம் என்னென பரிசோதனைகளைச் செய்துவருகிறது என்பதை அமெரிக்க அரசாங்கம் ரகசியமாக வைத்திருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் விண்வெளிப் படை இந்த ரகசிய விமானத்தின் படத்தை வெளியிட்டிருப்பது இதுதான் முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க விண்வெளிப் படையின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்த பதிவு வெளியாகியுள்ளது. "X-37B 2024 விமானம் HEO-ல் பரிசோதனை செய்துகொண்டிருக்கிறது. அதன் கேமரா பூமியைப் படம் பிடித்திருக்கிறது. X-37B ஏரோபிரேக்கிங் என்ற புது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகவும் குறைவான எரிபொருளை பயன்படுத்துகிறது. இதன் மூலம் தன் சுற்றுப்பாதையை பத்திரமாகப் வைத்திருக்கிறது" என அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
X-37B என்றால் என்ன?
X-37B அமெரிக்காவோட ரொம்ப ஸ்பெஷலான விமானம். இத விண்வெளியில பறக்குறதுக்காக டிசைன் பண்ணிருக்காங்க. இத அமெரிக்க விண்வெளிப் படையோட ராபிட் கேப்பபிலிட்டிஸ் ஆபீஸ் இயக்குது. விமானத்தோட ரெக்க 15 அடி அகலம் இருக்கும். இதோட நீளம் 29 அடி. இது விண்வெளியில தன்னோட மிஷன முடிச்சிட்டு பத்திரமா பூமிக்குத் திரும்ப முடியும்.
X-37B பண்ற சில பரிசோதனைகள் ரகசியமா இருக்கு. கதிர்வீச்சு விளைவு படிப்பு, விண்வெளி டொமைன் விழிப்புணர்வு சோதனை மாதிரி பரிசோதனைகள பண்ணிருக்காங்கன்னு விண்வெளிப் படை சொல்லியிருக்கு. X-37B ப்ரோக்ராம் 1999ல அமெரிக்க விண்வெளி ஏஜென்சி NASA கீழ ஆரம்பிச்சாங்க. அப்புறம் இத பாதுகாப்பு அமைச்சகத்துக்கு மாத்திட்டாங்க. X-37B ஏழு மிஷன முடிச்சிருக்கு. இது விண்வெளியில 4,000 நாளுக்கு மேல இருந்துருக்கு.