உலகில் வலிமைமிக்க தலைவர், பிரதமர் மோடி..!! இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு..!!

By Asianet TamilFirst Published Sep 16, 2019, 1:25 PM IST
Highlights

இந்திய விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது என்று எச்சரித்ததன் மூலம் உலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார் என அவர் பாராட்டினார். 
 

காஷ்மீரின்  சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து அதை இந்தியாவுடன் இணைத்தது மட்டுமல்லாமல், இந்திய இறையாண்மையில் மூன்றாவது நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என கூறியதன் மூலம் உலகில் வலிமை மிக்க தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என இங்கிலாந்து நாட்டின், நாடாளுமன்ற உறுப்பினர் பாரட்டியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் சீனா ஆகிய இரு நாடுகளும் இந்தியாவை பகிரங்கமாக எதிர்த்து வருகின்றன,  காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவருவதகவும்  ஐநா மனித உரிமை மன்றத்தில் பாகிஸ்தான் இந்தியா மீது புகார் அளித்து, அதற்கான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. இந் நிலையில் இங்கிலாந்தில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பிளாக்மேன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கையா பாரட்டுகிறேன்.

இந்தியா சுதந்திரம் அடைந்த  ஒரு சில ஆண்டுகள் முதல்  காஷ்மீர் இந்தியாவின் அங்கமாக இருந்து  வருகிறது, அப்படியிருக்கையில் அதில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது. அதை விமர்சிக்கவோ. எதிர்க்கவோ, அதில்  தலையிடவோ பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் தன்னுடைய ராணுவத்தை உடனே வெளியேற்றுவதுடன், முற்றிலுமாக காஷ்மீரை விட்டு வெளியேறவேண்டும் என்றார். சீனா பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் எதிர்த்த போதும் தன் முடிவில் உறுதியாக இருந்து இந்திய விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது என்று எச்சரித்ததன் மூலம் உலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார் என அவர் பாராட்டினார். 

இந்தியாவின் முடிவை தீவிரமான ஆதரிக்கிறேன் என்றும்,  ஐநா மன்றத்தில் இங்கிலாந்து இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன் என்றும் அப்போது அவர் கூறினார். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் கூடவே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!