உலக நாடுகளை அதிரவைத்த 80 பணக்காரர்கள்..!! வரி போட்டு பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என அதிரடி கடிதம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 13, 2020, 8:29 PM IST
Highlights

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இங்கிலாந்து நாட்டின் நிதி ஆய்வுகள் நிறுவனமான திங்க்-டேங்க், உயர் செல்வந்தர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினருக்கும் அதிக வரிவிதிப்பு என்பது தவிர்க்க முடியாதது என கூறியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யவும், அதற்கு நிதிபெறும் வகையிலும் சூப்பர் செல்வந்தர்களுக்கு அரசுகள் வரி விதிக்க வேண்டும் என உலகளவில் உள்ள 80 க்கும் மேற்பட்ட மில்லியனர்கள் திங்கட்கிழமையன்று சர்வதேச நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள மனம்  திறந்த அந்த மடலில்,  தங்களை "மனிதநேயத்திற்கான மில்லியனர்கள்" என்று குறிப்பிட்டுள்ள அவர்கள்,  அரசுகள் உடனடியாக, கணிசமாக, நிரந்தரமாக செல்வந்தர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அந்த கடிதத்தில் பென் மற்றும் ஜெர்ரி ஐஸ்கிரீம் நிறுவனத்தில் இணை நிறுவனர் ஜெர்ரி கிரீன்ஃபீல்ட், திரைக்கதை எழுத்தாளர் ரிச்சர்ட் கர்டிஸ் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் அபிகெய்ல் டிஸ்னி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்க தொழிலதிபர் சிட்னி டோபோல் மற்றும் நியூசிலாந்து சில்லறை விற்பனையாளர் ஸ்டீபன் டிண்டால் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். COVID-19 உலகத்தையே உலுக்கும்போது, ​​எங்களைப் போன்ற மில்லியனர்கள் நம் உலகத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியது அவசியம் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், நாங்கள் தீவிர சிகிச்சை வார்டுகளில் நோயாளிகளைப் பராமரிப்பவர்கள் அல்ல. நாங்கள் ஆம்புலன்ஸ்களை ஓட்டுபவர்களும் அல்ல, நோயுற்றவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வோரும் அல்ல, நாங்கள் வீதிவீதியாக மளிகை பொருட்களை கொண்டு மக்களுக்கு தருபவர்களும் அல்ல, வீடுகளுக்கு உணவு வழங்குபவர்களும் அல்ல. ஆனால் எங்களிடம் பணம் இருக்கிறது. அது நிறையவே இருக்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து நம் உலகம் மீண்டு வருவதற்கு பணம் இப்போது அதிகம் தேவைப்படும், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தேவைப்படும் என கருதுகிறோம், எனவே எங்களைப்போன்ற சூப்பர் செல்வந்தர்களுக்கு அரசுகள் நிறைய வரி விதிக்க வேண்டும். அதை உடனே விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் மனமுவந்து தெரிவித்துள்ளனர். இந்த கடிதம் எதிர்வரும் ஜி-20 நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் வாசிக்கப்பட உள்ளது.  உலகளாவில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்ட பல நாடுகள் ஏற்கனவே சாமானிய மக்கள் மீது அதிக வரிகளை விதித்து வருகின்றன. 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இங்கிலாந்து நாட்டின் நிதி ஆய்வுகள் நிறுவனமான திங்க்-டேங்க், உயர் செல்வந்தர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினருக்கும் அதிக வரிவிதிப்பு என்பது தவிர்க்க முடியாதது என கூறியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் விரைவில் தனது அரசாங்கம் அதிக வரிகளை அறிமுகப்படுத்த உள்ளது என அறிவித்துள்ளார். ரஷ்யா அதிக வருமானம் ஈட்டுபவர்களை குறிவைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு போன்றவற்றை ஈடுசெய்ய சவூதி அரேபியா விற்பனை வரியை அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது இந்நிலையில் "மனிதநேயத்திற்கான மில்லியனர்களின் கடிதம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. உலக ஆக்ஸ்பாம், வரி நீதி இங்கிலாந்து மற்றும் அதிக நிகர மதிப்புள்ள அமெரிக்க தனிநபர்கள், மற்றும் தேசபக்தி மில்லியனர்கள் உள்ளிட்ட குழுக்களின் ஒருங்கிணைந்த அமைப்பே மனிதநேயத்திற்கான மில்லியனர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!