கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாக கூறிவிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால் தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே 2வது உச்சநிலையை அடையும் என அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாக கூறிவிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால் தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே 2வது உச்சநிலையை அடையும் என அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் தற்போது பல நாடுகளில் நோய் பாதிப்பு கொஞ்சம் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவரும் நாடுகள் அனைத்திலும்,ஊரடங்கு வேகமாகத் தளர்த்தப்பட்டும் வருகிறது. இவை யாவும் உலகம் முழுக்க, பெரும்பாலான நாடுகள் இயல்புக்குத் திரும்ப வழிவகுத்துள்ளது. ஆனால், ஊரடங்கு தளர்வு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் கூறுகையில்;- கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 55 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. 3.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனால், ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றாலும், தென் அமெரிக்கா, தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நோய் தீவிரமடைந்து கொண்டுதான் போகிறது. கொரோனா இத்தனை மாதங்களில் நமக்கு சொல்லிக்கொடுத்துள்ள முக்கியமான பாடமே, இந்த வைரஸ் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பரவும் என்பதுதான். எந்த அடிப்படையில் இந்த வைரஸ் பரவுகிறது என்பதுகூட நமக்குத் தெரியவில்லை.
இந்த வைரஸ் முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் ஊகிக்க வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.