எம்பார்மிங் மருந்தை இளம்பெண்ணுக்கு போட்ட டாக்டர்கள்... இறந்தவரை பதப்படுத்தும் மருந்தை வைத்து கொன்ற கொடுமை!

First Published Apr 13, 2018, 5:36 PM IST
Highlights
Woman embalmed alive during fertility operation


ரஷியாவில் உள்ள உல்யாநோவ்ஸ்க் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் எக்ட்ரினா என்ற பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.

அவருக்கு உடலில் உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்பதால் அவருக்கு ஆபரே‌ஷன் செய்வதற்காக லேப்ராஸ் கோப்பிக் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இது தொடர்பான சில மருந்துகள் உடலில் செலுத்தப்பட்டது, இந்த மருத்துவமனைக்கு வேறொரு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மருந்தகத்திற்கு e-mail லில் அனுப்பப்படுமாம். மாற்றி அனுப்பப்பட்ட மெயில் மூலம் வந்த மருந்தான பார்மாலின் என்ற மருந்தை அவரது உடலில் செலுத்தினார்கள்.

இந்த மருந்து இறந்தவர்கள் உடலை பதப்படுத்துவதற்காக (எம்பார்மிங்) செலுத்தப்படும் மருந்தாகும். ஆனால் தவறுதலாக அவருக்கு செலுத்தி விட்டார்கள். இந்த மருந்தை செலுத்தியதும் அவரது உடலில் வெப்பநிலை அதிகரித்தது. கடுமையாக வயிற்றுவலி ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். 

அப்போதுதான் அவருக்கு செலுத்தப்பட்ட மருந்தை பரிசோதித்தனர். அது தவறுதலான மருந்து என்பது தெரியவந்தது. பார்மாலின் மருந்து கடுமையான வி‌ஷத்தன்மை கொண்டதாகும். எனவே அவருடைய உடலில் வி‌ஷம் பாதிக்க தொடங்கியது. அவருக்கு மாற்று மருந்து கொடுத்து சரி செய்ய முயற்சித்தனர். ஆனாலும் அது நடக்காத காரியம்.

சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அவரது உயிரை மீட்க டாக்டர்கள் எடுத்த தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போனதால். 3 வாரம் சிகிச்சைக்கு பிறகு பரிதாபமாக பலியானார்.

click me!