அமெரிக்கா அதிபர் தேர்தல் வாக்குச் சீட்டில் இருக்கும் ஒரே ஒரு இந்திய மொழி என்ன தெரியுமா?

 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு, நியூயார்க் நகர வாக்குச் சீட்டுகள் ஆங்கிலம் உட்பட நான்கு மொழிகளுடன், வங்காள மொழியிலும் அச்சிடப்பட்டுள்ளது.  

Why New York Elections Include Only One Indian Language on Ballots

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 200க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன என்று அந்த நகரை திட்டமிடும் துறை கூறுகிறது. இருப்பினும், ஆங்கிலம் தவிர, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளில் நான்கு கூடுதல் மொழிகள் மட்டுமே இருக்கும். அது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பட்டியலில் இந்திய மொழியாக வங்காள மொழி இடம் பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்கா தனது 47வது அதிபரை தேர்வு செய்கிறது. 

"ஆங்கிலத்துடன் கூடுதலாக, நான்கு மொழிகள் வாக்குச் சீட்டுகளில் அச்சிடப்பட வேண்டும். ஆசிய மொழிகளில் சீனம், ஸ்பானிஷ், கொரியன் மற்றும் வங்காளம் ஆகியவை அடங்கும்," என்று நியூயார்க் தேர்தல் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ஜே. ரியான் தெரிவித்துள்ளார்.  வாக்குச் சீட்டுகளில் வங்காள மொழி சேர்க்கப்படுவது வெறும் மரியாதை அல்ல, அது ஒரு சட்டப்பூர்வத் தேவை என்று தெரிய வந்துள்ளது.

Tap to resize

Latest Videos

சில வாக்குச் சாவடிகளில், நியூயார்க் நகரம் சட்டப்படி வங்காள மொழியில் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க வேண்டும். வங்காள மொழி பேசும் வாக்காளர்களுக்கு முழுமையான மொழி உதவி கிடைப்பதை இந்த வாக்குச் சீட்டு உறுதி செய்கிறது.  

தேர்தல் வாரியம் ஆதரிக்கும் மொழிகளின் பட்டியலில் வங்காள மொழி சேர்க்கப்படுவதற்கான விளக்கத்தை ரியான் வழங்குகிறார். வாக்குச் சீட்டில் மக்கள் தொகை அடிப்படையில் ஒரு மொழி சேர்க்கப்பட வேண்டும் என்ற வழக்கு ஒன்று இருந்தது. இந்தியாவில் பலவிதமான மொழிகள் உள்ளன. அந்த வழக்கின் தீர்வு ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகைக்கு ஏற்ப ஒரு ஆசிய இந்திய மொழி இருக்க வேண்டும் என்று கோரியது. பின்னர், சில பேச்சுவார்த்தைகள் மூலம், அவர்கள் வங்காள மொழியை சேர்க்க உடன்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் வங்காள மொழி பேசும் சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். இதன் அடிப்படையில், வங்காள மொழி வாக்குச் சீட்டு 2013 அறிமுகம் செய்யப்பட்டது. வங்காள மொழி பேசும் மக்கள் தொகையில் இந்தியா மற்றும் வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் அடங்குவர்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image