கூர்காக்கள் ஏன் இந்திய ராணுவத்தில் சேர்கிறார்கள்...?? தடுக்க தலைகீழாக நிற்கும் சீனா..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 18, 2020, 4:29 PM IST
Highlights

நேபாள நாட்டைச் சேர்ந்த கூர்க்கா சமூக இளைஞர்கள் ஏன் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகின்றனர் என்பது குறித்து ஆராய தொண்டு நிறுவனத்திற்கு சீனா நிதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேபாள நாட்டைச் சேர்ந்த கூர்க்கா சமூக இளைஞர்கள் ஏன் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகின்றனர் என்பது குறித்து ஆராய தொண்டு நிறுவனத்திற்கு சீனா நிதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேபாள நாட்டை சீனா தனது  கைப்பாவையாக்கினாலும், அந்நாட்டு கூர்கா இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் இணைவது சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நேபாள இளைஞர்கள் ஏன் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகின்றனர் என்பது குறித்து ஆராய சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக தொண்டு நிறுவனத்தின் மூலம் அந்த இளைஞர்களின் சமூக, பொருளாதார, சுழல்கள் குறித்து  ஆராய சீனா உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தில் சுமார் 39 பட்டாலியன் கூர்கா வீரர்கள் உள்ளனர். 1947 இல் இந்தியா, பிரிட்டன் மற்றும் நேபாளம் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் கூர்கா இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்திய ராணுவத்தில் ஏழு கூர்கா ரெஜிமென்ட்கள்  உள்ளன. அதில் சுமார் 28 ஆயிரம் நேபாளிகள் உள்ளனர். மொத்தம் 39 பட்டாலியன்களாக உள்ளனர். ஆரம்பத்தில் 11 கூர்கா ரெஜிமென்ட்கள்  இருந்தன,  அவற்றில் சுதந்திரம் அதற்குப்பிறகு நான்கு ரெஜிமெண்ட்கள் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு சென்றது. இந்தியாவில் முதல், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, எட்டாவது, ஒன்பதாவது, மற்றும் 11 ஆவது கூர்கா ரெஜிமெண்ட்கள் உள்ளன. பிரிட்டிஷ் ராணுவத்தில் 2, 6 ,7 மற்றும் 10வது ரெஜிமெண்ட்கள் உள்ளன.  கூர்க்கா சமூகம் முக்கியமாக நான்கு வெவ்வேறு பழங்குடியின சமூகமாக உள்ளது. காஸ், குருங், லிம்பஸ் மற்றும் ரைஸ் ஆகியனவாகும். இந்திய ராணுவத்தில் தேசப்பற்றுடன் கூர்க்கா படையினர், வீரதீர செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில்,  இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நம் அண்டை நாடான நேபாளத்தை தன் சொல்படி கேட்கும் கைப்பாவையாக மாற்றி வைத்துள்ள சீனா, தற்போது நேபாள இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர்வதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

ஜூன் முதல் வாரத்தில் நேபாளத்திற்கான சீன தூதர் ஹூ யாங்கி நேபாள தன்னார்வ தொண்டு நிறுவனமான சீன ஆய்வு மையத்திற்கு (சிஎஸ்சி) சுமார் 12.5 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார். ஏன் நேபாளிகள் இந்திய ராணுவத்தில்சேர ஆர்வம் காட்டுகின்றனர், ஆட்சேர்ப்புகள் நடைபெறும் பகுதிகள் மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார தாக்கம் போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்து அறிக்கையாக  சமர்ப்பிக்குமாறு ஹூ யாங்கி அந்த அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஓலி முன்கூட்டியே பிரிட்டிஷ் பிரதமராக இருந்த தெரேசா மே உடனான சந்திப்பின் போது 1947 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் நேபாள கூர்காக்கள் ஆட்சேர்ப்பு ஒப்பந்தத்தை கேள்வி எழுப்பினார். அதில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய பகுதிகளான லிபுலேக், கலபானி, லிப்பியதுரா ஆகியவை நேபாளத்திற்கு சொந்தமானதென அவர் உரிமை கொண்டாடி வரும் பிரச்சனை இரு நாட்டுக்கும் இடையே விரிசலை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனா கூர்க்காக்கள் இந்திய ராணுவத்தில் சேர்வதை தடுப்பதில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

click me!