சிட்னிக்கு பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு விமானப் புகை மூலம் வானில் வெல்கம் மோடி வரவேற்பு!!

By Dhanalakshmi G  |  First Published May 23, 2023, 12:18 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருக்கும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


ஜப்பான், பப்புவா நியூ கினியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சா வழியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை சந்திப்பதற்காக மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு 170 வம்சாவழி இந்தியர்கள் வந்துள்ளனர். இவர்கள் பயணித்த விமானத்துக்கு மோடி ஏர்வேஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சிட்னிக்கு பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விமானங்களில் இருந்து புகை வெளியேற்றப்பட்டு வெல்கம் மோடி என்ற எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. சிட்னியில் நடக்கும் இந்திய வம்சாவழி நிகழ்வுகளில் இந்தியர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடியை வித்தியாசமாக வரவேற்ற சிட்னி. pic.twitter.com/bNdqGPTk59

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

Tap to resize

Latest Videos

click me!