#UnmaskingChina:தென்சீனக்கடலில் இந்தியாவின் உதவியை எதிர் நோக்கும் அமெரிக்கா..!! உச்சகட்ட பதற்றத்தில் சீனா..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2020, 4:36 PM IST
Highlights

சமீபத்திய இந்தோ-சீனா மோதலுக்குப் பிறகு, தென்சீனக் கடல் தகராறில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கும் என்று கருத்து நிலவி வருகிறது. தென் சீனக் கடலை  ஒரு பொதுவான பகுதியாகவே இந்தியா கருதுகிறது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், தென் சீனக் கடலில் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.இரண்டு அமெரிக்க கடற்படை விமானம் தாங்கிகள், தென் சீனக் கடலில் திங்கள்கிழமை போர் பயிற்சிகளை நடத்தியது. யுஎஸ்எஸ் நிமிட்ஸின் தளபதி ரியர் அட்மிரல் ஜேம்ஸ் கிர்க், செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தொலைபேசியில், "நாங்கள் அனைத்திற்கும் தாயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சகம், அமெரிக்கா தனது கப்பல்களை தென் சீனக் கடலுக்கு வேண்டுமென்றே அனுப்பியுள்ளது, இதனால் அதன் வலிமையை வெளிப்படுத்த முடியும் என்றும், பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தவும் அமெரிக்கா முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது. இந்த பகுதியில் அமெரிக்காவும் சீனாவும் தங்கள் பலத்தைக் காட்ட முயற்சிப்பது இது முதல் தடவையல்ல, ஆனால் இந்த முறை நிலைமை சற்று வித்தியாசமானதாகவே உள்ளது, கொரோனா தொற்றுநோய் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது, இந்த விஷயத்தில் அமெரிக்கா சீனாவுக்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்துவருவதையும் காணமுடிகிறது. 

இது குறித்து தெரிவித்துள்ள, இந்திய அரசின் முன்னாள் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணரும், சீன ஆராய்ச்சியாளருமான ஜெய்தேவ் ரானடே, "கொரோனா தொற்றுநோயால் அமெரிக்க கடற்படை பலவீனமடைந்துள்ளதாக சீனா கூறியது, சீனாவுக்கு அதன் சக்தி குறையவில்லை என்று எச்சரிக்கை செய்ய அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவும் தென் சீனக் கடல் ஒரு நடுநிலையான பகுதி என்பதைக் காட்ட விரும்புகிறது, இதுவரை இந்த பகுதியில் பதற்றம் அதிகரிக்க வில்லை ஆனால் ஒரு சீனக் கப்பல் எதிரில் நிலை நிறுத்தப்படும்போது பதற்றம் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையில் 3.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள கடற்பகுதிக்கு சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் மற்றும் புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரி வருகின்றன.  ஒரு தசாப்த காலமாக இந்த பகுதியில் அதிக பதற்றம் இல்லை. ஆனால் அங்கு சீனா மேற்கொண்ட கடல் அகழ்வாராய்ச்சிகளுக்குப் பின்னர் இந்த கடற் பகுதியை சுற்றி பெரிய அளவிலான கட்டுமானத்தைத் சீனா கட்டத் தொடங்கியது. முதலில் ஒரு துறைமுகம் கட்டப்பட்டது. பின்னர் விமானங்கள் தரையிறக்க ஓடுபாதை அமைக்கப்பட்டது, அதைத்தொடர்ந்து தென் சீனக் கடலில் ஒரு செயற்கைத் தீவைத் உருவாக்கி அதன் மீது ஒரு இராணுவத் தளத்தை உருவாக்கியுள்ளது. இதனால்தான் இந்த பகுதி பதற்றம் நிறைந்ததாக மாறியுள்ளது. 

சமீபத்திய இந்தோ-சீனா மோதலுக்குப் பிறகு, தென்சீனக் கடல் தகராறில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கும் என்று கருத்து நிலவி வருகிறது. தென் சீனக் கடலை  ஒரு பொதுவான பகுதியாகவே இந்தியா கருதுகிறது. அது எந்த நாட்டிற்கும் சொந்தமானது அல்ல அது பொதுவான பகுதி என்பதே இந்தியாவின் கருத்தாக உள்ளது. அதேபோல் அண்மைக்காலமாக சீனாவுடனான உறவு மோசமடைந்து வருவதால்,  இந்தியா-அமெரிக்கா இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது இதனால் தென்சீனக் கடலில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று சர்வதேச வல்லுனர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவும் அதையே எதிர்பார்க்கிறது. ஜெய்தேவ் ரானடே கூற்றுப்படி "அமெரிக்கா இந்தியாவை தனக்கான ஆதரவு சக்தியாகவே பார்க்கிறது, இந்தியா தற்போதுள்ள அதே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது, 2015 இல் ஒபாமா இந்தியாவுக்கு வந்தபோது ஒரு கூட்டு அறிக்கையில், தென் சீனக் கடலில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருப்பதாக இந்தியா கூறியது. இந்நிலையில் அங்கு சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்கா தனது போர் கப்பல்களை நிறுத்தியுள்ள நிலையில் நிச்சயம் இந்தியா தனக்கு ஆதரவாக இருக்கும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

 

click me!