அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கலைப் பொருட்களை அள்ளிக்கொண்டு வந்த பிரதமர் மோடி… மதம் தொடர்பான சிலைகள் ஒப்படைப்பு…

By manimegalai a  |  First Published Sep 26, 2021, 8:48 AM IST

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கலைப் பொருட்களை அள்ளிக்கொண்டு வந்த பிரதமர் மோடி… மதம் தொடர்பான சிலைகள் ஒப்படைப்பு…


இந்தியாவில் இருந்து கடந்த காலங்களில் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கலைப்பொருட்களை அந்நாட்டு அரசு திருப்பி ஒப்படைத்துள்ளது.

ஐ.நா. சபைக் கூட்டம், குவாட் உச்சிமாநாடு ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்களையும் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பின் போது, கலாசார பொருள்களின் திருட்டு, சட்டவிரோத வா்த்தகம், கடத்தல் ஆகியவற்றை எதிர்த்து இருநாடுகளும் போராடுவதற்கான உறுதிப்பட்டை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர்.

Tap to resize

Latest Videos

அந்த பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாக, கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 157 கலைப்பொருட்களை பிரதமர் மோடியிடம் அமெரிக்க அரசு ஒப்ப்டைத்துள்ளது. அதில், 71 கலாசார பொருள்கள், இந்து மதம் தொடா்பான 60 சிலைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், பெளத்த மதம் தொடா்பான 16 சிலைகள், சமண மதம் தொடா்பான 9 சிலைகள் அடங்கும். 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்றரை மீட்டா் ரேவந்தா கற்சிலை முதல் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 8.5 செ.மீ. உயரமுள்ள நோ்த்தியான வெண்கல நடராஜா் சிலையையும் அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. அமெரிக்காவின் இச்செயலை பிரதமர் மோடி மனதார பாராட்டியிருக்கிறார்.

click me!