Ukraine-Russia War: போரில் 9000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு... உக்ரைன் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

By Narendran S  |  First Published Mar 3, 2022, 7:14 PM IST

ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்ற போரில் இதுவரை 9,000 ராணுவ வீர்ரகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்ற போரில் இதுவரை 9,000 ராணுவ வீர்ரகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைனில் கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடர்ந்த தாக்குதலை இன்று வரை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8 ஆவது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசு பதிலடி கொடுத்து தான் வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட வீடியோவில், எங்கள் நாட்டின் மீது படையெடுத்ததற்கான விலையை ரஷ்யா நிச்சயம் கொடுக்கும். இழப்பீடு என்றொரு வார்த்தை உள்ளது.

Tap to resize

Latest Videos

அதை இப்போதே உச்சரித்துப் பழகுங்கள். எங்களுக்கு நீங்கள் செய்த கொடுமைகள் அனைத்திற்கும் நீங்களே இழப்பீடு தருவீர்கள். ஒவ்வொரு உக்ரேனியருக்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டியது வரும். இப்போதைக்கு நாங்கள் இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தைத் தவிர வேறு ஏதுமில்லை. ஆனால், நாங்கள் இங்குள்ள ஒவ்வொரு நகரையும், ஒவ்வொரு தெருவையும் ஏன் ஒவ்வொரு வீட்டையும் கூட மீட்டமைப்போம் என வேதனை தெரிவித்தார். இந்நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ராணுவத்திற்குரிய தொழில்நுட்பத்திற்கான ஏற்றுமதியை பாதிக்கும் வகையில், அமெரிக்கா, புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பு, ஐரோப்பிய ஒன்றியம், பெலாரஸ் நாட்டின் விவசாயத்துறையை பாதிக்கும் வகையில், பல தடைகளையும்  அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா கூறுகையில், உக்ரைனில் இருந்து 10 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், இந்த தாக்குதலால் 1.20 கோடி மக்கள் இடம் பெயர நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்ற போரில் இதுவரை 9,000 ராணுவ வீர்ரகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 30 போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், 31 ஹெலிகாப்டர்கள், 217 பீரங்கி வாகனங்கள், 900 கவச வாகனங்கள், 374 ராணுவ வாகனங்கள், 42 ராக்கெட் ஏவுகணைகள், மற்றும் உக்ரைன் படைகளை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட 3 ட்ரோன்கள், 2 படகுகளை  சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தனர். அதே போல் 60 எரிபொருள் டேங்குகள், மேலும் நீண்ட தூரம் தாக்க கூடிய 90 பீரங்கி படைகளை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அதிகார பூர்வமாக அறிவித்தது. 

click me!