Ukraine : அபார பலம் கொண்ட ரஷ்யா, உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது.
உக்ரைனை கைப்பற்றும் ரஷ்யா :
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நார்வே உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷிய எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய ராணுவ தளபதி பலி :
ராணுவ தளங்களை தாக்குகிறோம் எனக்கூறும் ரஷிய படையினர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என தாக்குதலை விரிவுபடுத்துகின்றன. கீவின் அண்டை நகரான ஹாஸ்டோமல் நகர மேயர் யூரி புரைலிப்கோ உணவு மற்றும் மருந்துகளை கொடுத்து உதவுவதற்காக வெளியே வந்தபோது துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.
இந்நிலையில், கார்கிவ் அருகே ரஷிய மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவை உக்ரைன் படைகள் கொன்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஜெனரல் ஜெராசிமோவ் ஒரு மூத்த ராணுவ அதிகாரி, இரண்டாவது செச்சென் போரில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.