அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்வது யார்? வீழ்வது யார்? - ஹிலாரி- டிரம்ப் இடை கடும் போட்டி

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 08:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்வது யார்? வீழ்வது யார்? - ஹிலாரி- டிரம்ப் இடை கடும் போட்டி

சுருக்கம்

உலகமே எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டனும், டொனால்ட் டிரம்பும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று மாலையில் இருந்து (இந்திய நேரப்படி) வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் முதல்முறையாக ஒரு பெண் அதிபராக வரப் போகிறாரா? அல்லது அரசியல் அனுபவமே இல்லாத நபர் வரப்போகிறாரா? என்பது நாளை தெரியும்.

தீவிரப் பிரசாரம்

அமெரிக்காவின் 45-வது அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக தொழிலதிபர்டொனால்ட் டிரம்பும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, கடும் போட்டி நிலவியது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரம் செய்து வந்தனர்.

அமெரிக்க ஊடகங்கள்

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் அதிபர் வேட்பாளர்களுக்கு  இடையே இதுபோல் ‘அறுவறுக்கத்தக்க விமர்சனங்கள்’ இதற்கு முன் வந்தது இல்லை என அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.

ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், இரு வேட்பாளர்களும் அமெரிக்க வாக்காளர் ஒவ்வொருவரின் ஆதரவையும் பெற கடந்த சில நாட்களாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஹிலாரி கோஷம்

நார்த் கரோலினா மாநிலத்தில் உள்ள ரேலிக் என்ற இடத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தை ஹிலாரி கிளிண்டன் ேநற்றுமுன்தினம் மேற்கொண்டார். அப்போது ஹிலாரியுடன் அவரின் கணவர் பில் கிளிண்டன், ஹிலாரி குடும்பத்தினர், அதிபர் ஒபாமா ஆகியோரும் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். ‘ஒன்றாக இணைந்து வலுப்படுத்துவோம்’ என்று கோஷத்தில் ஹிலாரி பிரசாரம் செய்தார்.

டிரம்ப் கோஷம்

அதேபோல, மிச்சிகன் நகரில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது இறுதிக்கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டார். ‘மறுபடியும் அமெரிக்காவை சிறப்பாக்குவோம்’ என்ற கோஷத்தில் டிரம்ப்பிரசாரம் செய்தார்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் மிச்சிகன் மாநிலத்தில் வெற்றியை தீர்மானிக்க முடியாமல் இருப்பதால், அதை தனதாக்கும் முயற்சியில் டிரம்ப் பிரசாரம் செய்தார். ஏறக்குறைய தேர்தல் தொடங்கும் 6 மணிநேரம் முன்பு வரை இரு வேட்பாளர்களும் பிரசாரத்தை மேற்கொண்டனர்.

4 கோடி பேர் வாக்களிப்பு

இந்த தேர்தலில் ஏறக்குறைய 20 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில் 4 கோடி பேர் தேர்தலுக்கு முன்பே வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தி வாக்களித்து விட்டனர்.

கடந்த சில நாட்களாக ஹிலாரி, டிரம்ப் இடையிலான தேர்தல் போட்டி இடைவெளி மிகவும் குறைந்து தீவிரமடைந்தது இருந்தது. ஆனால், பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள், ஹிலாரிகிளிண்டனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளன.

ஹிலாரிக்கு முதல் வெற்றி

இந்நிலையில், அமெரிக்காவின் நியு ஹேம்ப்ஷயர் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் முதன்முதலாக வாக்குப்பதிவு தொடங்கியது. அங்கு வாக்குப்பதிவு முடிந்ததுடன் உடனுக்கடன் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் ஹிலாரி 4 வாக்குகள் பெற்று முதல் வெற்றி பெற்றார். டிரம்பைக் காட்டிலும் 2 ஓட்டுக்கள் அதிகம் பெற்றார் ஹிலாரி

PREV
click me!

Recommended Stories

சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!
கொடூரம்.. தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்!