ஐ.நா.வில் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்க திடீர் விசிட் அடித்த அதிபர் டிரம்ப்

By Selvanayagam P  |  First Published Sep 24, 2019, 12:43 AM IST

ஐ.நா.வில் நடந்துவரும் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்பதற்காக திடீரென எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்தார். ஏறக்குறைய 15 நிமிடங்கள் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டுவிட்டு சென்றார்.


அமெரிக்காவுக்கு 7 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஐ.நா.பொதுக்குழுக்கூட்டம் நடக்கிறது இதில் 27-ம் தேதி பிரதமர் மோடி பேசஉள்ளார். முன்னதாக ஹூஸ்டன் நகருக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி அமெரிக்க இந்தியர்கள் நடத்திய ஹவுடி மோடி நிகழ்ச்சியில்  அதிபர் டிரம்புடன் சேர்ந்து பிரதமர் மோடி பங்கேற்றுப்பேசினார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து நியூயர்க் நகரம் சென்று சேர்ந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில் ஐ.நாவில் பருவநிலை மாநாடு நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி பேச முற்பட்டார். இந்த மாநாட்டுக்கு அதிபர் டிரம்ப் வருவார் என எந்த நாட்டு அதிபருக்கும் பிரதமர்களுக்கும் தெரியாது. ஆனால், யாரும் எதிர்பாராமல் திடீரென ஐ.நா. சபைக்குள் மாநாடு நடக்கும் இடத்துக்குள் அதிபர் டிரம்ப் வந்தார். அவரைப் பார்த்தவுடன் அனைத்து தலைவர்களும் திடுக்கிட்டனர். அதன்பின் அமைதியாக ஒரு இருக்கையில் அமர்ந்த அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி பேசும் பேச்சை அமைதியாகக்கேட்டார். பிரதமர் மோடி பேசி முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டார்.

Latest Videos

ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
பருவ நிலை மாற்றத்தை வெல்ல நம் இடையே ஒரு விரிவான ஒருமித்த கொள்கை தேவைப்படுகிறது. இந்த உலகம் இதற்கென கடுமையாக உழைத்து வருகிறது. பருவ நிலை மாற்றத்தை வெல்ல 80 நாடுகள் இணைந்து போராடி வருகிறது. தேவை என்பது பேராசை அல்ல, இதுவே நமது கொள்கை. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை இந்தியா துவக்கி விட்டது. மரபுசாரா எரிசக்தியை இந்தியா பயன்படுத்த துவங்கி விட்டது.

நீரை சேமிப்பது, நீர் வளத்தை பெருக்குவதற்கென ஜல்சக்தி திட்டத்தை இந்தியா முன்னெடுத்து செல்கிறது. வரும் காலங்களில் நீர்வளத்துறைக்கு 5000 கோடி டாலர் நிதியை ஒதுக்க உள்ளோம். இந்தியா எலக்ட்ரானிக் வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு இயற்கை எரிவாயு சமையல் ேகஸ் வழங்கி உள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 175 ஜிகா வாட் 2022 -ல் பெறுவோம். இது மேலும் 450 ஜிகா வாட்டாக பெருக்குவோம். பேசியது போதும். உலகம் இப்போது செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டது.
இவ்வாறு மோடி பேசினார்.

click me!