பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து - 53 பேர் பலி!

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 12:20 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து - 53 பேர் பலி!

சுருக்கம்

Cameroon நாட்டில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைகிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Cameroon தலைநகர் Yaounde-வில் இருந்து துறைமுக நகரான Douala-விற்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, Eseka என்னும் ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இவ்விபத்தில் 53 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 9 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் கூடுதலாக பயணிகளை ஏற்றுவதற்காக மேலும் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டதே இந்த விபத்து ஏற்பட காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!