டிக்டாக் போட் ஜம்பிங் சேலஞ்ச்: 4 பேர் பலி!

By Manikanda Prabu  |  First Published Jul 11, 2023, 9:59 AM IST

டிக்டாக் போட் ஜம்பிங் சவாலில் ஈடுபட்ட 4 பேர் கடந்த 6 மாதங்களில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் போட் ஜம்பிங் சவாலில் ஈடுபட்ட 4 பேர் கடந்த 6 மாதங்களில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா உள்பட சில நாடுகளில் டிக்டாக் சமூக வலைதளம் தடை செய்யப்பட்டிருந்தாலும், பல்வேறு நாடுகளில் அவை இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த டிக்டாக் சமூக வலைதளத்தில் பலரும் தங்களின் திறமைகளை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதுதவிர, சில சவால்களும் ட்ரெண்ட் செய்யப்படும். அந்த வகையில், டிக்டாக்கில் தற்போது பிரபலமாக இருப்பது #BoatJumpingChallenge சவால். இதன்படி, அதிவேகமாகச் செல்லும் படகிலிருந்து குதிக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், டிக்டாக் போட் ஜம்பிங் சவாலில் ஈடுபட்ட 4 பேர் கடந்த 6 மாதங்களில் உயிரிழந்துள்ளதாக அலபாமா மாகாண சில்டர்ஸ்பர்க் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த சவாலில் ஈடுபடுபவர்கள், கடலில் குதித்ததும் கழுத்து முறிபட்டு உயிரிழப்பதாகவும், அவர்களின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படியா.! இறந்த நோயாளி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்ட நர்ஸ் - அதிர்ச்சி சம்பவம்

அதேசமயம், இந்த இறப்புகள் டிக்டாக் சவாலுடன் தொடர்புடையது அல்ல என அலபாமா சட்ட அமலாக்க நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் படகுகளில் இருந்து குதித்து படுகாயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு என பதிவாகியுள்ளது. ஆனால், அவர்களது உயிரிழப்பை போட் ஜம்பிங் சவாலுடன் தொடர்புபடுத்த முடியாது என அலபாமா சட்ட அமலாக்கத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

click me!