வியட்நாம் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி பலியானவர்க்ளின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக வியட்நாமில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று இரவு நிலவரப்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 15 உயிரிழந்தனர். இந்நிலையில், மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். அப்போது வெள்ளத்தில் அடித்து சென்றும் நிலசரிவில் சிக்கியும் மீட்பு படையினர் உட்பட இன்று பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.