அமெரிக்காவில் மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி.. மீண்டும் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அலறும் உலக நாடுகள்.

By Ezhilarasan Babu  |  First Published Mar 1, 2021, 11:22 AM IST

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது பிறழ்வு அடைந்து வருகிறது. அந்தவகையில்  பிரேசிலில் உருமாறிய கொரோனா பிரிட்டனின் பரவத் தொடங்கியுள்ளது, பிரிட்டனில் மூன்று பேருக்கும், ஸ்காட்லாந்தில் மூன்று பேரையும் அந்த வைரஸ் தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 


இதுவரை உலக அளவில் 10 சதவீதத்திற்கும் குறைவான மக்களே கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், தடுப்பூசி மூலம் மட்டுமே மக்கள் மத்தியில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும், தற்போது செயல்பாட்டில் இருந்து வரும் தடுப்பூசி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும்  லேசான நோய் மற்றும் அறிகுறி அல்லாத நோய்த்தொற்றுகளுக்கு எதிராக தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Tap to resize

Latest Videos

அமெரிக்காவில் மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி: 

உலக அளவில் கொரோனா வைரஸால் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் தற்போது மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  சனிக்கிழமை அமெரிக்கா ஜான்சன் அன்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் அளித்தது. மாடர்னா மற்றும் பைசருக்கு பிறகு அந்நாட்டில் அங்கீகரிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசி இதுவாகும்.  இது அமெரிக்காவின் முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசி ஆகும், அதாவது இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்தினால் போதும்.  இந்த வகை தடுப்பூசியை அறிமுகமாவது இதுவே முதல் முறை ஆகும். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கு நல்ல செய்தி என வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஆன்ட்டி ஸ்லாவிட் கூறியுள்ளார். இந்த தடுப்பூசியின் சோதனை அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஒழுங்குமுறை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது 66.5 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் வேகமெடுக்கும் கொரோனா: 

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது பிறழ்வு அடைந்து வருகிறது. அந்தவகையில்  பிரேசிலில் உருமாறிய கொரோனா பிரிட்டனின் பரவத் தொடங்கியுள்ளது, பிரிட்டனில் மூன்று பேருக்கும், ஸ்காட்லாந்தில் மூன்று பேரையும் அந்த வைரஸ் தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல பிரான்சிலும் கொரோனா வைரசின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19, 952 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. அதில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் இதுவரை 37 லட்சத்து 55 ஆயிரத்து 968 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் நாட்டில் 86.154 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1871 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

click me!