
Most Safe Places in the World: இன்றைய நவீன உலகம் பெரும் பதற்றத்திலேயே உள்ளது. ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர், பல்வேறு நாடுகளில் எல்லை பிரச்சனை என எங்கு பார்க்கிலும் யுத்த களமாகவே உள்ளன. இதனால் உலகில் மூன்றாம் உலகப்போர் வரப்போகிறது என்ற பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் போரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மூன்றாம் உலகப்போரை தூண்டுகிறார் என அமெரிகக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
மூன்றாம் உலகப்போர் குறித்த பதற்றம்
இப்படியாக உலகில் மூன்றாம் உலகப்போர் குறித்த பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், ஒருவேளை மூன்றாம் உலகப்போர் வந்தால் உலகில் எந்த இடங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். போரில் வீசப்படும் அணுசக்தி குண்டுகள் உலகளாவிய உணவு விநியோகத்தில் குறைப்பு மற்றும் கதிர்வீச்சு மூலம் பெரும் அழிவை ஏற்படுத்தும். இருப்பினும், அணுசக்தி யுத்தத்தின் விளைவுகளால் குறைவாக பாதிக்கப்படும் சில பகுதிகள் உலகம் முழுவதும் உள்ளன.
ஆங்கிலசி (Anglesey)
ஆங்கிலசி என்பது வடமேற்கு வேல்ஸின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு ஆகும். இது மெனாய் ஜலசந்தியால் பிரதான நிலப்பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அழகான கடற்கரைகள் மற்றும் பரந்து விரிந்த நிலப்பரப்புக்கு பெயர் பெற்ற ஆங்கிலசி மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இன்கு போரின்போது அணு ஆயுதங்கள் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.
கார்ன்வால் (Cornwall)
கார்ன்வால் என்பது இங்கிலாந்தின் தென்மேற்கு முனையில் உள்ல கரடுமுரடான பகுதிகள் நிறைந்த கடற்கரைகளால் ஆன மிகவும் கிராமப்புறப் பகுதியாகும். அதன் கடற்கரையோரம் செங்குத்தான பாறைகள் மற்றும் தெற்கே, ஃபால் மற்றும் ஃபோவே நதிகளின் முகத்துவாரங்களில் உள்ளன. இங்கு அணுகுண்டுகள் நுழைவது சாத்தியமில்லாத ஒன்று என்று பலரும் கூறுகின்றனர்.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா கண்டங்கள் (Arctic and Antarctica Continents)
ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா ஆகியவை உலகின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகள். அவற்றின் பெரிய மற்றும் அசாதாரண நிலப்பரப்பு காரணமாக, சாத்தியமான அணுசக்தி தாக்குதலில் இருந்து தப்பிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவை தங்குமிடம் அளிக்க முடியும்.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவைத் தவிர, பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகள், இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை மூன்றாம் உலகப் போரின் போது பாதுகாப்பான புகலிடங்களாக மாறக்கூடும்.
சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் (Switzerland and Singapore)
உலகில் பாதுகாப்பான புகலிடங்களில் நீண்டகால அரசியல் நடுநிலைமைக்கு பெயர் பெற்ற சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் இருக்கின்றன. இந்த நாடுகளின் விரிவான மலைப்பிரதேசங்கள் போர் ஏற்பட்டால் அணுஆயுத தாக்குதலில் இருந்து குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்குகின்றன.
நியூசிலாந்து, அயர்லாந்து
இதேபோல் தென் அமெரிக்காவில் உள்ள சிலி, உருகுவே மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளும் போர் ஏற்பட்டால் பாதுகாப்பான புகலிடங்களாக இருக்கும். இந்த நாடுகள் முக்கிய உணவு ஏற்றுமதியாளர்களாகவும் உள்ளதால் போரினால் இங்கு உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் பிஜி தீவுகள், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, நியூசிலாந்து, பூடான், அயர்லாந்து ஆகிய நாடுகளும் உலகின் பாதுகாப்பான புகலிடங்களாக உள்ளன.